ஓட்டுப்போட்ட கையோடு.. ‘குட் பேட் அக்லி’ போஸ்டரில் அதை கவனிச்சீங்களா?.. ஜூம் பண்ணுங்க தெரியும்!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு நடிகர் அஜித் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்று இருப்பது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெளிவாக தெரிகிறது.
'புஷ்பா' படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் போல நடிகர் அஜித் குமார் லுக் இருப்பதாக தெரிகிறது. மேலும் போஸ்டரில் டிராகன் டிசைன் எல்லாம் இருக்கின்றன. குட் அஜித், பேட் அஜித் மற்றும் அக்லி அஜித் என ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமார் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட் கொடுக்க போகிறார் எனத் தெரிகிறது.
மங்காத்தா வைப்: வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'மங்காத்தா' திரைப்படத்தில் எந்த அளவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் வெளுத்து வாங்கி இருப்பாரோ அந்த அளவுக்கு தரமான சம்பவமாக 'குட் பேட் அக்லி' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.
வேதாளம் கணேஷ்: அஜித்தின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அப்படி 'வேதாளம்' கணேஷ் மீண்டும் வந்தது போல படு மாசாக உள்ளதாக ஏகப்பட்ட கம்பேரிசன் போஸ்டுகளை வெளியிட்டு வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற " ஆலுமா டோலுமா" பாடல் போல ஒரு பாடலை இந்தப் படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் வைத்துவிட்டால் போதும் அடுத்த ஆண்டு பொங்கல் தல பொங்கல் தான் என கொண்டாடி வருகின்றனர்.
ஓட்டுப்போட்ட கையோடு: கடந்த மாதம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதிகாலையிலேயே நடிகர் அஜித்குமார் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தி விட்டு சென்றார். ஓட்டுப்போட்ட கையோடு நடிகர் அஜித் 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படப்பிடிப்புக்காக சென்று இருக்கிறார் என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அஜித்தின் கைவிரலில் மை அழியாமல் இருப்பதை பாருங்கள் என ரசிகர்கள் ஜூம் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











