அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் ஷங்கர் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், அஜித் குடும்பம் எங்கேப்பா காணோம் என ரசிகர்கள் கமெண்ட் போட்ட நிலையில், ஷாலினி அஜித் தனது மகன் மற்றும் மகளுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.

பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரம்மாண்டமாக ஒரு ராயல் வெட்டிங்கை தனது மகள் ஐஸ்வர்யா சந்தோஷப்படுத்தும் வகையில் நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர் என்று தான் சொல்ல வேண்டும்.

Ajith Kumar family attends Shankar daughter Marriage reception photos goes trending

முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், அழுது புலம்பிக் கொண்டிருந்த மூத்த மகளுக்கு உடனடியாக இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

உடனடியாக இரண்டாவது திருமணம்: தனது மகள்கள் இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்த இயக்குநர் ஷங்கர். மூத்த மகள் ஐஸ்வர்யாவை விளையாட்டு வீரர் ஒருவருக்கு திருமணம் செய்துக் கொடுத்தார். ஆனால், சில பல வில்லங்கத்தில் அவர் சிக்கிய நிலையில், ஐஸ்வர்யா அந்த திருமணமே தனக்கு வேண்டாம் என ரத்து செய்து விவாகரத்து பெற்றார். விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததும் அடுத்து தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு பிடித்த மாப்பிள்ளையை பார்த்து ஷங்கர் உடனடியாக இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

Ajith Kumar family attends Shankar daughter Marriage reception photos goes trending

பாலிவுட் முதல் டோலிவுட் வரை: ஷங்கர் திருமணம் என்றால் சும்மாவா அவர் அழைத்தால் அனைத்து பிரபலங்களும் நட்பின் பேரில் வரத்தானே செய்வார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஜான்வி கபூர், ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் போனி கபூர், கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், காஜல் அகர்வால், சித்தார்த், அதிதி ராவ், சங்கீதா விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். அதே போல டோலிவுட்டில் இருந்து ராம்சரண், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Ajith Kumar family attends Shankar daughter Marriage reception photos goes trending

அஜித் குடும்பமும் ஆஜர்: தளபதி விஜய் கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் உள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா விஜய் திருமணத்தில் கலந்து கொண்டார். அதே போல நடிகர் அஜித் தனது பைக் டீமுடன் டூர் அடித்து வரும் நிலையில், அவரது மனைவி ஷாலினி அஜித், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உள்ளிட்டோர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது.

அவ்ளோ அழகு அஜித் மகள்: அம்மா ஷாலினியை விட ஹைட்டாக இருக்கும் அஜித்தின் மகள் அனோஷ்கா அதிதி ஷங்கரை விட அவ்வளவு அழகாக அந்த போட்டோவில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே ஹீரோயினாக்கிடுங்க என கமெண்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர். அஜித்தின் மகனும் செம க்யூட்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அஜித்தின் மகன் மற்றும் மகளின் போட்டோக்களை தனித்தனியா கிராப் செய்து ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Ajith Kumar family attends Shankar daughter Marriage reception photos goes trending

விடமுயற்சி ரிலீஸ் தேதி: ஷாலினி அஜித் குடும்ப புகைப்படம் வெளியான நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அப்டேட்டையும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து வருகின்றனர். மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தேர்தலில் வாக்கு செலுத்த அஜித் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X