Ajith Family: குட் பேட் அக்லி படம் பார்க்க வராத அஜித் மகன்.. ஷாலினி, அனோஷ்காவின் ரியாக்ஷன் என்ன?
சென்னை: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக மாறியுள்ளது. மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் குமார், மாஸான டானாக நடித்துள்ளதால், ரசிகர்கள் அஜித்தை மட்டும் இல்லாமல் இயக்குநர் ஆதிக்கையும் கொண்டாடி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆன தினத்தில் படக்குழுவுடன் அஜித்தின் குடும்பத்தினர் இணைந்து படம் பார்த்தார்கள். அப்போது அஜித்தின் மகன் ஆத்விக் படம் பார்க்க வரவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. ஆனால், நேற்று முன்தினம் ரிலீஸ் ஆன குட் பேட் அக்லி படம், ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. குறிப்பாக அஜித்தின் இதற்கு முந்தைய படங்கள் பலவற்றையும் இதில் சேர்த்து, ரெஃபரன்ஸ் ரெஃபரன்ஸ் என படத்தை அஜித் ரசிகர்களுக்கான விருந்தாக படைத்துள்ளார், ஆதிக் ரவிச்சந்திரன்.

படத்தை பார்த்த ரசிகர்கள், நாங்கள் தல அஜித்தை எப்படி எல்லாம் திரையில் பார்க்க ஆசை பட்டோமோ, அதைவிட பல மடங்கு மேலாக எங்களுக்கு காட்டியுள்ளார், ஆதிக். எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை ஆதிக் நிறைவேற்றிவிட்டார். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம் என கூறும் ரசிகர்களும் உள்ளார்கள்.
வசூல் சாதனை: படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 30.9 கோடிகள் வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் தனிப்பட்ட வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானதால், அவை குட் பேட் அக்லி படத்தின் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 60 கோடிகள் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

அஜித் குடும்பம்: படத்தை படக்குழுவினர் ரிலீஸ் ஆன நாளில் முதல் காட்சியே ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களுமே இணையத்தில் வேகமாக பரவியது. படத்தின் இயக்குநர் தொடங்கி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் படத்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பார்த்தனர். இப்படியான நிலையில் அஜித் குடும்பத்தினரும் படத்தை ரோகிணி திரையரங்கில் பார்த்துள்ளார்கள்.

அஜித் மகன்: அதாவது அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, அஜித் - ஷாலினி தம்பதியரின் மகள் அனோஷ்கா என இருவரும் படத்தை முதல் நாள் முதல் காட்சியை சென்னை, கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பார்த்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே, இணையத்தில் பகிர்ந்துள்ளது. இதில் அஜித்தின் மகன் ஆத்விக் இல்லாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் குட் பேட் அக்லி படம் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க சென்சார் தரப்பில் பரிந்துரைக்கப்படுள்ளதால், அஜித் மகன் ஆத்விக் படம் பார்க்க அழைத்து வரப்படவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளிக் குழந்தையான ஆத்விக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர். இன்னும் சொல்லப்போனால், அப்பா அஜித்தைப் போலவே மகன் ஆத்விக்கும் ஸ்போர்ட்ஸ்-இல் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். இப்படியான நிலையில், ஆத்விக் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் வென்றார். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகி வணிக ரீதியாக தோல்விப் படமாக மாறியது. அதேபோல் நேற்று முன் தினம் அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் வெற்றிப் படமாக உருவாகி வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வரும் அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில்தான் கலந்து கொள்ளவுள்ளார். ஏற்கனவே துபாயில் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற, கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது அவரது, அஜித்குமார் ரேஸிங் அணி. இப்படியான நிலையில் அவரது அணி தொடர்ந்து, உலகம் முழுவதும் நடைபெறவுள்ள கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருகிறது.
அஜித்குமார் தனது குடும்பத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர். மகன் தன்னை எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொன்னால், படப்பிடிப்புத் தளத்தில் இருந்தே கிளம்பிப் போய்விடுவார். அண்மையில் கூட பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியை தனது மகன் பார்க்க ஆசைப்பட்டார் என்ற காரணத்திற்காக, அழைத்துச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் கூட வெளியானது.
அஜித்குமார் கார் ரேஸில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ள நிலையில், அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். நாட்டிற்கே பெருமை சேர்த்த அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டும் இல்லாமல், அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தது.
இப்படியான நிலையில் அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் ஆத்விக் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் சிறப்பாக ஓடி, முதல் இடத்தினை வென்றார். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்த இணையவாசிகள், வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஷாலினி பகிர்ந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பா சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிக்கின்றார், மகன் பள்ளிகளுக்கு இடையில் வெற்றிகளையும் பதக்கங்களையும் இப்போது இருந்தே குவிக்கின்றார் என வாழ்த்தவும் கமெண்ட்ஸும் செய்தனர். அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை, அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும், குட்டித் தல, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள் என வாழ்த்தினார்கள். குட் பேட் அக்லி படம் 16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்பதால் ஆத்விக்கை அஜித் மனைவி ஷாலினி அழைத்து வரவில்லை.


Click it and Unblock the Notifications











