அஜித்துனா யாருன்னு கேட்ட துரைமுருகன்.. கருணாநிதியை டார்கெட் செய்யும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி திமுக அமைச்சர் துரைமுருகனிடம் தொகுப்பாளர் கேட்க, அஜித்துன்னா யாரு என துரைமுருகன் பேசியதை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

உடனடியாக பொங்கி எழுந்த அஜித் ஆர்மி #ஐயோஅம்மா_கொல்றாங்க ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து கருணாநிதியையே டார்கெட் செய்து அஜித் என்றால் யாருன்னு இப்போ புரியும் உங்களுக்கு என வச்சு செய்து வருகின்றனர்.

Ajith Kumar fans attacking Durai Murugan and Karunanidhi on social media for this reason

அந்த ஹாஷ்டேக்கில் துரைமுருகனையும் கருணாநிதியையும் ட்ரோல் செய்து ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ மீம்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அஜித்துனா யாரு: திமுக அமைச்சர் துரைமுருகனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் மீடியா ஒன்றில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் விஜய், அஜித் படங்களை பார்த்துருக்கீங்களா என கேள்வி எழுப்ப, தெளிவாக தெரியாதது போல அஜித்துன்னா யாரு? என துரைமுருகன் கேட்கும் அந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவே தீப்பிடித்து எரிய காரணம் என்கின்றனர்.

டிரெண்டாகும் #ஐயோஅம்மா_கொல்றாங்க: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை இரவில் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகளை பதிவிட்டு #ஐயோஅம்மா_கொல்றாங்க ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் துரைமுருகனின் பேச்சுக்கு பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கதறல் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

கருணாநிதி முன்னாடியே கெத்தா பேசிய அஜித்: பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என முதலமைச்சராக இருக்கும் போது கருணாநிதி நடத்திய விழாவில் கலந்துக் கொண்டு, நடிகர்களை இப்படி விழாக்களுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம் என அஜித் பேச அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவையும் ஷேர் செய்து இதுதான் எங்கள் அஜித் என்றும் அமைதியா இருக்கிறவங்கள சீண்டிப் பார்க்காதீங்க, அப்புறம் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் திமுகவினரை எச்சரித்துள்ளனர்.

பாகுபலி வாள்: அஜித் குமார் மீது கை வைப்பதும், பாகுபலியின் வாள் மீது கை வைப்பதும் ஒன்று தான் என துரைமுருகன் போட்டோவை போட்டு அஜித் ரசிகர்கள் எச்சரித்து ட்விட்டர் டிரெண்டிங்கை மிகப்பெரிய அளவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X