இந்த தேதியில் வெளியாகிறதா அஜித்தின் வலிமை.. போனி கபூர் இன்னும் மெளனம் காப்பது ஏன்? #Valimai

சென்னை: விரைவில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி தரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ரிலீசுக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றன.

பொங்கலுக்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிப் போன நிலையில், பிப்ரவரி மாதம் வெளியாகுமா? அல்லது மார்ச் மாதம் வெளியாகுமா? என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 24ம் தேதியே வலிமை திரைப்படம் வெளியாகும் என சில தியேட்டர் அதிபர்களே அதிகாரப்பூர்வமாக ட்வீட் போட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இதுதான் நல்ல சான்ஸ்

இதுதான் நல்ல சான்ஸ்

இந்த மாதமே வலிமை திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் நல்ல முடிவாக இருக்கும் என பலரும் தெரிவித்து வரும் நிலையில், அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ரசிகர்கள் #Valimai டிரெண்ட் செய்து வருகின்றனர்.

போனி கபூர் அமைதி

போனி கபூர் அமைதி

வலிமை ரிலீஸ் போஸ்டர்களுடன் ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வரும் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் வலிமை படக்குழுவினர் இன்னமும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. இன்று கண்டிப்பாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

வலிமை படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் எல்லாம் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னமும் எகிற வைத்தன. ஆனால், எதிர்பார்த்த நேரத்தில் படம் வெளியாகாமல் ஏமாற்றிய நிலையில், இந்த மாதமே படம் வெளியாகி தங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

400 கோடி பிசினஸ்

400 கோடி பிசினஸ்

தளபதி விஜய்யின் படங்கள் 300 கோடி வசூல் வேட்டையை நிகழ்த்தியதாக கூறப்படும் நிலையில், 400 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வேட்டையாடும் என அஜித் ரசிகர்கள் வசூலில் இந்த முறை மிகப்பெரிய மைல் கல்லை நோக்கி திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

வலிமை மாதம்

வலிமை மாதம்

பிப்ரவரி 1ம் தேதியான இன்று முதல் வலிமை மாதம் தொடங்கி உள்ளதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி உள்ளனர். வலிமையுடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோதும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் சற்றே தள்ளிப் போகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X