விளம்பரத்தில் அஜித்.. இப்படி செய்யலாமா? ரசிகர்கள் என்ன தாக்காளி தொக்கா.. அதிருப்தியில் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் அஜித்குமார், தனது Ajith Kumar Racing Team-ஐ பிரபலப்படுத்தும் வகையில் சமீபத்தில் கம்பெனியின் ஸ்பான்சர்ஷிப்புக்காக அம்பானியின் கேம்பா விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் அஜித்குமார் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக, படங்களில் நடித்தாலும், விளம்பரங்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். துணி படம் வெளியான போது, "ஒரு நல்ல படம் தான் தன்னைத் தானே விளம்பரம் செய்து கொள்ளும்" என தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இதனால், தற்போது, Ajith Kumar Racing Team-ஐ பிரபலப்படுத்தும் வகையில் கம்பெனியின் ஸ்பான்சர்ஷிப்புக்காக அம்பானியின் கேம்பா விளம்பரத்தில் நடித்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

Ajith Kumar Campa advertisement

அஜித் விளம்பரம்: சிலர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அஜித்தை விளம்பரத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி என்றும், அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு செருப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு ஆடை விளம்பரத்தில் நடித்து இருந்தார். சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக பிறகு சிம்ரனுடன் சேர்ந்து காபி விளம்பரத்தில் நடித்து இருந்தார். சினிமாவில் உச்சநடிகராக மாறி பிறகு தான் விளம்பரத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். தற்போது தனது கார் ரேஜிங்கின் வளர்ச்சிக்கா விளம்பரத்தில் நடிப்பதில் தவறு இல்லை என்கின்றனர்.

ரசிகர்கள் ஷாக்: இன்னும் சிலர், இது அஜித்தின் முந்தைய நிலைப்பாட்டுக்கு முரணானது. "சினிமாவிற்கு ஒரு விதி, வியாபாரத்திற்கு ஒரு விதியா?" அதுவும் குளிர்பானா விளம்பரத்தில் நடிக்கலாமா? கடவுளே அஜித் என தலையில் தூக்கி கொண்டாடும் அஜித் இப்படி செய்யலாமா? ரசிகர்கள் என்ன தாக்காளி தொக்கா? என அஜித் ரசிகர்களே அவரை மனம் நொந்து இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Racing career: அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. கடந்த ஒரு வருடமாக அஜித் சினிமாவையும், கார்பந்தயத்தையும் இணைத்து செயல்பட்டு வருகிறார். தனது racing career மீது கவனம் செலுத்துவதற்காக அவர் சுமார் ஒன்பது மாதங்கள் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்திருந்தார். தற்போது அஜித், அபுதாபியில் நடைபெறும் சர்வதேச கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X