OG வின்டேஜ் அஜித் ஃபேன்ஸ் இறங்க வேண்டிய நேரம் இது.. TVKவுக்கு ஓட்டு இல்லை.. இணையத்தில் ட்ரெண்ட்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி மாலையே கட்சிகள், வேட்பாளர்கள் என பிரசாரத்தை முடித்துக் கொண்டாலும், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று இணையவாசிகளின் ஆட்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் இந்த முறை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் போஸ்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் அஜித் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு தங்களது வாக்கு இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தனது ரசிகர்கள் மற்ற நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களையும் மிகவும் மோசமாக விமர்சித்தனர். அது விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்குமே நடைபெற்றுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் விஜய் ரசிகர்கள் இப்படியான நடவடிக்களை கைவிட வில்லை. சில ரசிகர்கள் எல்லாம் ஓபனாகவே சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ரஜினி ரசிகர்களின் ஓட்டே எங்களுக்குத் தேவையில்லை, அஜித் ரசிகர்களின் ஓட்டே எங்களுக்குத் தேவையில்லை. அவர்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சி அமைக்க வேண்டிய நிலை விஜய்க்கோ எங்களுக்கோ கிடையாது என்று எல்லாம் விபரீத வசனம் பேசினார்கள்.

ரசிகர்களின் இது போன்ற பேச்சுக்களை விஜய் கண்டிக்காததன் விளைவு, தற்போது இணையத்தில் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. அதாவது, இணையவாசிகள் ஒரு பக்கம் விஜய்க்கு ஓட்டு போட மாட்டோம் என்று டிரெண்ட் செய்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் சிலர் நேரடியாகவே, விஜய்யின் தவெகவுக்கு தங்களது ஓட்டு இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு அஜித் ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், " நாளை எக்காரணத்தை கொண்டும், ஏன் கண்மூடி கொண்டு வாக்கு செலுத்தினாலும், கை தவறியும் TVK க்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை அஜித் ரசிகர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்குறோம். OG வின்டேஜ் அஜித் பேன்ஸ் எறங்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட்டுக்கு அஜித் ரசிகர்கள் பலரும் லைக் போட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் சில விஜய் ரசிகர்கள், அஜித்தே விஜய்க்குத்தான் ஓட்டு போடுவாரு, சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக பார்க்க வேண்டாம், விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்றும் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில், விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை விஜய்க்கு அன்புப் பரிசாக அளித்தனர். அதை விஜய்யும் அன்போடு பெற்றுக் கொண்ட காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இதை எல்லாம் பார்க்கும் போது, விஜய்க்கு அஜித் ரசிகர்களின் ஆதரவும் இருக்கிறது என்பதும் புலப்படுகிறது என்று இணையத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications