ஒரு விடாமுயற்சி போஸ்டராவது விட்டுருக்கலாம்.. லைகா போட்ட வாழ்த்து ட்வீட்.. அஜித் ரசிகர்கள் அப்செட்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் மட்டுமே வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
நடிகர் அஜித்குமார் இன்று தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சோஷியல் மீடியா முழுவதும் விடாமுயற்சி ஹாஷ்டேக் நேற்றில் இருந்து டிரெண்டாகி வருகிறது. அந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், லைக்கா நிறுவனம் தற்போது நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர் ஒன்றை மட்டும் வெளியிட்டுள்ளது.
அப்டேட்டே கிடையாதா?: ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலரும் தங்கள் பிறந்தநாளை முன்னிட்டு தங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த புதிய படங்களின் அப்டேட்களை அதிகப்படியாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவொரு அப்டேட்டும் இன்று வெளியாகாதா? என பயங்கர கடுப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து: அஜித் குமாரின் பல படங்களின் ஸ்டில்களை ஒன்றாக இணைத்து ஹேப்பி பர்த்டே அஜித்குமார் என்கிற போஸ்டரை மட்டும் வெளியிட்டு அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாக வேண்டும் என லைகா நிறுவனம் வாழ்த்தியுள்ளது. ஆனால், விடாமுயற்சி படத்தின் எந்த ஒரு பிரத்யேக போஸ்டரையும் விடவில்லையே லைகா நிறுவனம் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் தீட்டி தீர்த்து வருகின்றனர்.

விடாமுயற்சி என்ன ஆச்சு?: லைகா நிறுவனம் வெளியிடாமல் சமீபத்தில் சுரேஷ் சந்திரா அஜித் குமார் விபத்து ஸ்டன்ட் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். சுமார் 4 மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அஜித் குமார் விடாமுயற்சி ஷூட்டிங்கில் பங்கேற்பார். மே 1ம் தேதி லைகா நிறுவனம் தாறுமாறான அப்டேட் வெளியிடும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் கடுப்பானது தான் மிச்சம்.
புஷ்பா 2வில் பிஸி: மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்று 'குட் பேட் அக்லி' படத்தின் எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடுமா என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர். புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ள நிலையில், அதில் தான் ஃபோகஸாக உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











