300 நாள் ஆச்சு.. விடாமுயற்சி என்னாச்சு?.. வாலி ரீரிலீஸ் ஆன நிலையில் சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜித்தின் வாலி மற்றும் பில்லா படங்கள் ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் கொண்டாட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், இன்னமும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகவில்லை என அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்களை கேட்டு வருகின்றனர்.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படம் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

லைகா நிறுவனத்தையே காணவில்லை என்றும் விடாமுயற்சி படம் என்னதான் ஆச்சு என வாலி படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திடீரென பதாகைகளுடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அஜர்பைஜானில் பிரச்சனை: விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் திடீரென அங்கே வானிலை சரியில்லை என்கிற காரணத்துக்காக சென்னைக்கு படக்குழு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்து விட்டது என்றும் விரைவில் அடுத்த இடத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனால், சில வாரங்கள் கடந்த நிலையிலும், இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.
வாலி, பில்லா ரீரிலீஸ்: கமலா உள்ளிட்ட தியேட்டர்களில் தற்போது அஜித்தின் வாலி மற்றும் பில்லா படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. வெறும் 69 ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்று ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகின்றனர். குறைவான டிக்கெட்டில் சூப்பர் ஹிட் படங்களை பார்க்க ரசிகர்கள் வீக்கெண்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்களை கவர புதிய புதிய படங்களை தியேட்டர்கள் ரீரிலீஸ் செய்து வருகின்றன. பாஸ் என்கிற பாஸ்கரன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.
300 நாள் ஆச்சு?: விடாமுயற்சி படத்தின் டைட்டில் ரிலீஸ் செய்து 300 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் படத்தின் அப்டேட் கூட லைகா வெளியிடாமல் தூங்கிக் கொண்டிருக்கிறதா? விடாமுயற்சி படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ரொம்பவே விரக்தியடைந்து கேட்டு வருகின்றனர். வாலி படத்தையும் பில்லா படத்தையுமே ரசிகர்கள் இப்படி கொண்டாடுகின்றனர் என்றால் விடாமுயற்சி வந்தால் வேறலெவல் வசூல் வரும் என தெரிகிறது. ஆனால், அந்த படம் விரைவில் வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











