அஜித்துக்காக சிவா செய்த வேலை.. கட்டுக்கடங்காத கூட்டம்.. என்னங்க இப்படி இறங்கிட்டாரு?.. இவ்வளவு பாசமா?

சென்னை: அஜித்குமார் நடிப்பைவிட இப்போது ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்திவருகிறார். நாடு நாடாக சென்று ரேஸிங்கில் பங்கெடுக்கும் ஏகே இப்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார். அவரை காண்பதற்கு மலேசிய வாழ் தமிழ் ரசிகர்கள் சர்க்யூட்டில் குவிந்துவருகிறார்கள். அப்படி கட்டுக்கடங்காத கூட்டத்தில் இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு இப்போது ஏகே கொண்டாடப்படும் அஜித்குமார் நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவருகிறார். இந்த வருடத்தில் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வந்தன. இருந்தாலும் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காகத்தான் அவசர அவசரமாக இரண்டு படங்களில் நடித்தார். இதிலிருந்தே அவரது பிரதான கவனம் ரேஸுக்கு சென்றிருப்பதை பலரும் உணர்ந்தார்கள்.

படங்களும் சுமார்தான்: இரண்டு படங்களில் ஏகே நடித்தாரே அவரது ரசிகர்கள் திருப்திப்பட்டுக்கொண்டாலும்; அவ்விரண்டும் மோசமான விமர்சனங்களை பெற்றது சோகத்தை கொடுத்திருக்கிறது. குட் பேட் அக்லியையாவது அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள். விடாமுயற்சியை அவர்களே ஓரமாக ஒதுக்கித்தான் வைத்தார்கள். அதேசமயம் இன்னும் சில வருடங்கள் கழித்து அந்தப் படத்தை ரசிப்பார்கள் என ஒருதரப்பினர் கூறிவருகிறார்கள்.

Ajith Kumar Focused on Racing in Malaysia Siruthai Siva s Gesture Wins Fans Hearts
Photo Credit:

ரேஸிங்கில் கவனம்: கிட்டத்தட்ட தனது பெரும்பாலான கவனத்தை அவர் ரேஸ் பக்கம் திருப்பி; அங்கும் வியக்கத்தக்க விஷயங்களையே செய்துவருகிறார். துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரேஸ் ஓட்டி வென்ற அஜித்; இப்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட நடிகர் சிம்பு மலேசியா சென்றிருந்தபோது அஜித்தை நேரில் சந்தித்தார். அவர் மட்டுமின்றி மலேசிய வாழ் தமிழ் மக்களே அஜித்தை காண்தற்கு ரேஸ் நடக்கும் சர்க்யூட்டுக்கு படையெடுத்தார்கள்.

சிறுத்தை சிவா செய்த செயல்: இந்நிலையில் அப்படி கட்டுக்கடங்காத கூட்டம் வந்தபோது இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல் ஒன்று ரசிகர்களிடையே வைரலாகியிருக்கிறது. அதாவது அஜித்தை பார்க்க வந்த ரசிகர்கள் வரிசையை ஒழுங்குப்படுத்துவதும், அவர்கள் அஜித்துக்கு கொடுக்கும் பரிசு பொருட்களை வாங்கி வைப்பதும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் சேர்ந்து பிஸியாக இருந்தார். இதை பார்த்த ரசிகர்களோ, அட அஜித்துக்காக இவ்வளவு இறங்கி வந்து வேலைகள் செய்கிறாரே. இவ்வளவு பாசம் வைத்திருப்பதால்தான் அவரும் அஜித்தும் சேர்ந்து நான்கு படங்கள் பணியாற்றினார்கள் என ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துவருகிறார்கள்.

ஆவண படம் எடுக்கிறாரா?: இதற்கிடையே இன்னொரு தகவலும் ஓடுகிறது. அதாவது அஜித் கார் ரேஸில் கலந்துகொண்டிருப்பது பற்றி ஒரு ஆவண படத்தை எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும்; முதலில் அதை இயக்குவதற்கு ஏ.எல்.விஜய் பெயர் பரிசீலனையில் இருந்தது; ஆனால் சிறுத்தை சிவா சரியாக இருப்பார் என அவரை ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அதற்கான வேலைகளும் தொடங்கவிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X