Don't Miss!
- News
அலட்சியம்.. துடிதுடித்து இறந்த பெண் ஐடி ஊழியர்! விதிமீறல் நடந்துள்ளதாக சென்னை மேயர் பிரியா விளக்கம்
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
துணிவு நடிகருக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த அஜித் குமார்.. பார்க்க சும்மா சூப்பர் ஹீரோ மாறி இருக்காரே!
சென்னை: துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜான் கொக்கனுக்கு அஜித் குமார் அளித்துள்ள சிறப்பு கிஃப்ட் ரசிகர்களைஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கன்.
அஜித்தின் வீரம், பாகுபலி, கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பல படங்களில் அடியாளாக நடித்துள்ளார் ஜான் கொக்கன்.
பனையூரில் பிரியாணி விருந்து... சைலண்டாக விஜய்யை சந்தித்த துணிவு இயக்குநர் ஹெச் வினோத்?

வேம்புலி
சாதாரண கதாபாத்திரத்தில் இருந்து வில்லன் ரோல் அவருக்கு சார்பட்ட பரம்பரை படத்தில் தான் கிடைத்தது. பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்ட பரம்பரை படத்தில் ஆர்யாவை எதிர்த்து சண்டை போடும் வேம்புலியாக ஜான் கொக்கன் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

துணிவு படத்திலும்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்திலும் ஜான் கொக்கனுக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான இவருக்கு அஜித் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், சூப்பரான ஒரு கிஃப்டையும் அஜித் கொடுத்திருக்கிறார்.

ஸ்டன்ட் பாடி சூட்
வில்லன் நடிகரான ஜான் கொக்கன் துணிவு படத்தில் பயங்கரமான ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்திருப்பார் போல தெரிகிறது. அதற்காகத்தான் இப்படியொரு ஸ்டன்ட் பாடி சூட்டை நடிகர் அஜித் பரிசாக வழங்கி உள்ளார். அதனை அணிந்து கொண்டு எடுத்த போட்டோக்களை ஜான் கொக்கன் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அயன்மேன் போல
மார்வெல் படங்களில் வரும் அயன்மேனை போல உடல் முழுவதும் பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டு ஜான் கொக்கன் கொடுத்துள்ள போஸ்களை பார்த்த ரசிகர்கள் அஜித்துக்கு என்னவொரு அக்கறை பாருங்க என பாராட்டி வருகின்றனர். ஜான் கொக்கனின் மனைவி பூஜா ராமசந்திரனும் இந்த கிஃப்டால் ரொம்பவே ஹாப்பி ஆகி உள்ளார்.

கிரிக்கெட் பேட்
சமீபத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கி இருந்தார். அதன் போட்டோவை யோகி பாபு ஷேர் செய்திருந்தார். இந்நிலையில், அஜித் வழங்கிய அன்பு பரிசை ஜான் கொக்கன் வெளியிட்டுள்ளார். இரு முன்னணி ஹீரோக்களும் சக நடிகர்கள் மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகின்றனர் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.