கோவையில் கட்சி மீட்டிங்கில் விஜய்.. குடியரசுத் தலைவரைச் சந்திக்க டெல்லி சென்ற அஜித்.. என்ன காரணம்?

சென்னை: நடிகர் அஜித்திற்கு இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஆண்டு என்றே கூறலாம். கார் ரேஸில் இதுவரை மூன்று பதக்கங்கள், வெளியான இரண்டு படங்களில் ஒரு படம் சொதப்பினாலும் அடுத்த படத்தில் மாஸ் கம்பேக், 25 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நிறைவு என ரொம்பவும் சந்தோஷமாக உள்ளார். இந்த பட்டியலில் மிகவும் முக்கியமான விஷயம் ஏற்கனவே இணைந்திருந்தாலும், அது நாளை கை கூடவுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

திரைத்துறையில் அஜித் குமார் குறித்து இருக்கும் பார்வை என்றால், ' அவர் ஒரு ஜெண்டில் மேன்' என்பதுதான். தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற மமதையில் இல்லாமல், அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் அஜித் என அவருடன் பணியாற்றிய பல திரைப்பிரபலங்கள் தெரிவித்துள்ளார்கள். இதெல்லாம் உண்மை என்றாலும், அஜித்தை அவரது ரசிகர்களுக்கு பிடிக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அஜித்தை விட்டு விலகக் கூடாது, அவருக்கு எப்போதும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவரது ரசிகர்கள் வரக் காரணம், சக மனிதராக அவரது சில நடவடிக்கைகள்தான்.

Ajith Kumar Goes Delhi To Meet President of India For padma awards 2025 With Family

அஜித்: தனது ரசிகர்கள் மன்றத்தை கலைத்த அஜித், தனது ரசிகர்களிடத்தில் கூறிய விஷயம் ரொம்பவும் முக்கியம். படிப்பவர்கள் நன்றாக படியுங்கள், வேலைக்குச் செல்பவர்கள் நன்றாக உழையுங்கள், குடும்பத்தை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். எனது படம் ரிலீஸ் ஆகும்போது, உங்களுக்கு பிடித்தால் வந்து பாருங்கள் எனக் கூறினார். அண்மையில் கூட, அஜித் வாழ்க, விஜய் வாழ்கனு சொல்லிட்டு இருக்கீங்க, நீங்க எப்போது வாழப் போறீங்க என்ற கேள்வியைக் கேட்டார் அஜித். தமிழ் சினிமா பிரபலங்களில் எம்.ஆர். ராதா போன்ற வெகு சிலரே இப்படியான அறிவுரைகளை ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூறினார்கள்.

Ajith Kumar Goes Delhi To Meet President of India For padma awards 2025 With Family

ரசிகர்கள் : அஜித் இப்படி சொன்ன பின்னர் அஜித்தை அவரது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அஜித் தற்போது ஐரோப்பிய ஜி.டி. 4 ரக கார் ரேஸில் தனது அணியுடன் மிகவும் பிஸியாக உள்ளார். இந்த கார் ரேஸ் ஆனது, உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடம், ஒரு முறை இரண்டாவது இடம் என அவரது அணி வெற்றி வாகை சூடியுள்ளது. தற்போது இந்தியா வந்த அஜித் குமார் தனது மனைவியுடன் 25 வது திருமண ஆண்டைக் கொண்டாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை பார்க்க வந்தார்.

அப்போது அவர் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என தனது மொத்த குடும்பத்தையுமே அழைத்துக் கொண்டு போட்டியைப் பார்க்க வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அஜித்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்ததும், தல தோனியைப் பார்க்க தல அஜித் வந்து இருக்காரு என உற்சாகமடைந்தனர். மேலும் இணையத்தில் அஜித்தின் புகைப்படத்தையும் வீடியோக்களையும் வேகமாக பகிர்ந்தனர். அஜித் குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயன் இருவரும் போட்டியைப் பார்த்தார்கள். அதேபோல் போட்டியின் முடிவில், அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் வரவேற்றார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் இப்போதும் உலா வருகிறது.

இந்த போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்னர் அதாவது, ஏப்ரல் 24ஆம் தேதி அஜித்குமார் மற்றும் ஷாலினி தங்களது 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. அவரது ரசிகர்கள் தொடங்கி, திரைப்பிரபலங்கள் என அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அஜித்தின் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள 64வது படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே குட் பேட் அக்லி படம் இவர்கள் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூலில் இதுவரை உலக அளவில் சுமார் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Ajith Kumar Goes Delhi To Meet President of India For padma awards 2025 With Family

அஜித் குடும்பம்: தற்போது அவர் தனது குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்றுள்ளார். அஜித் குமார் தனது குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்றுள்ள தகவல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், விஷயம் பலருக்கும் பிடிபடாமல் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த விருதைப் பெறவே அஜித் குமார் தனது குடும்பத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர் இன்று அதாவது, ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லிக்குச் சென்றுள்ளார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் கோவையில் தனது கட்சி மீட்டிங்கில் பிஸியாக இருக்க, அஜித் தனது குடும்பத்தினருடன் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

அஜித் தனது பெயரில் தொடங்கியுள்ள கார் ரேஸ் அணியான, ' அஜித்குமார் ரேஸிங்’ அணியின் உரிமையாளராக மட்டும் இல்லாமல், கேப்டனாகவும் உள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை இவரது அணி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டது. இது மட்டும் இல்லாமல், துபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் இவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. அதன் பின்னர் இவரது அணி இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் மூன்றாவது இடம் பிடித்தது. அதன் பின்னர் பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது. வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் போட்டிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் வரும் போட்டிகளிலும் அஜித்குமார் ரேஸிங் அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என பலரும் வாழ்த்துகிறார்கள். அஜித் இந்த் கார் ரேஸ்க்காக தனது உடல் எடையை மிகக் குறுகிய நாட்களில் குறைத்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மொத்தத்தில் இந்த அண்டின் முதல் நான்கு மாதங்கள் அஜித்திற்கு மிகவும் சிறப்பான மாதங்களாக அமைந்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி அவர் தனது, 54வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X