Good Bad Ugly Box Office: அடித்து ஆடும் அஜித்.. கோடிகளில் நிறையும் பாக்ஸ் ஆபிஸ்.. GBU வசூல் விபரம்!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித்தின் 63வது படம் ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு குட் பேட் அக்லி என்ற டைட்டிலைத் தேர்வு செய்தது அஜித் தான் என இயக்குநர் ஆதிக் தெரிவித்தார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி இன்றுடன் 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 17 நாட்களுக்கான வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
குட் பேட் அக்லி படம், இந்த ஆண்டில் வெளியாகும் அஜித்தின் இரண்டாவது படம் ஆகும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மாஸான காட்சிகள் இல்லை என்பதால் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே படம் தோல்வி படமாக மாறியது. இதனால் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் குட்ய் பேட் அக்லி படத்தின் மீது எகிறியது.

குட் பேட் அக்லியில்அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர், ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், பிரசன்னா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் முழுவதும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை படத்தை வேற லெவலுக்கு உயர்த்தியது. இது மட்டும் இல்லாமல், படத்தில் ஆங்காங்கே ரெட்ரோ பாடல்களை வைத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்துவிட்டார்கள். படத்தில் இடம்பெற்ற ஓ.ஜி. சம்பவம், புலி புலி புலி, அனிருத் பாடிய பாடல்கள் என அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன.

டீசர் & டிரைலர்: படத்தின் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். டீசர் மற்றும் டிரைலர் என அனைத்துமே இணையத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. மேலும் குட் பேட் அக்லி தமிழ் நாட்டில் சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை அனைத்துமே ஃபேன் பாய் சம்பவமாக இருந்ததால், ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித்ட் மிகவும் மாஸான படத்தில் நடித்துள்ளார் என பலரும் கூறினார்கள்.
குவியும் கோடிகள்: குட் பேட் அக்லி படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதில் தமிழ்நாட்டில் சுமார் 900 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாக இருந்தது. அஜித்தின் தீவிர ரசிகர்கள் படத்தை திரும்பத் திரும்ப பார்த்தார்கள். படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றுடன் அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதியுடன் 18 நாட்கள் ஆகிறது.

மொத்த வசூல்: இந்நிலையில் 17 நாட்களில் படத்தின் வசூல் குறித்து Sacknilk வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 17வது நாளில் படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 1.75 கோடிகள் வசூல் செய்துள்ளது. படம் இரண்டு வாரத்தில் தமிழ் நாட்டில் மட்டும், ரூபாய் 172.3 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. தற்போது படம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இல்லாமல் வெளிநாடுகளில் கிட்டத்தட்ட ரூபாய் 120 கோடிகள் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











