Good Bad Ugly Box Office: இது தமிழ்நாடு இல்ல.. தல நாடு.. வசூலில் பட்டையை கிளப்பும் அஜித்தின் GBU!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித்தின் 63வது படம் ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படம் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு தெரிவித்துள்ளது.

குட் பேட் அக்லி படம், இந்த ஆண்டில் வெளியாகும் அஜித்தின் இரண்டாவது படம் ஆகும். ஏற்கனவே வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைப் பெற்றாலும், வணிக ரீதியாக படம் தோல்வி படமாக மாறியது. அதன் பின்னர் வெளியான குட் பேட் அக்லி படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் சிறப்பாக இசையமைத்திருந்தார். படம் முழுவதும் அவரது இசை படத்தை வேற லெவலுக்கு உயர்த்தியது. இது மட்டும் இல்லாமல், படத்தில் ஆங்காங்கே ரெட்ரோ பாடல்களை வைத்து ரசிகர்களை அமர்களப்படுத்திவிட்டார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் யூடியூப் தளத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்து சென்று கொண்டுள்ளது.

Ajith Kumar Good Bad Ugly 2 Weeks Tamilnadu Box Office Official Collection Goes High

குட் பேட் அக்லி: படத்தின் டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. டீசர் மற்றும் டிரைலர் என அனைத்துமே இணையத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. மேலும் படம் தமிழ் நாட்டில் சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் சொன்னதைப்போல படத்தில் அஜித்தை குறிப்பாக விண்டேஜ் அஜித்தை கொண்டுவந்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடினர்.

Ajith Kumar Good Bad Ugly 2 Weeks Tamilnadu Box Office Official Collection Goes High

எதிரொலி: இது போன்ற படத்திற்காகத்தான் அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருந்தார்கள். அஜித்திற்கு குட் பேட் அக்லி படத்தில் பல இண்ட்ரோ சீன்கள் இருந்தது. மேலும் அஜித் நினைத்தால் இப்படியும் படம் கொடுக்க முடியும் என தமிழ் திரையுலகத்திற்கு நிரூபித்த படமாக இந்த படம் உள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்றதால், அது வசூலிலும் எதிரொலித்தது.

வசூல் மழை: அதாவது படம் தமிழ் நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதில் தமிழ்நாட்டில் சுமார் 900 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் வாரத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாகத்தான் ஓடியது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த இரண்டு வாரத்தில் தமிழ் நாட்டில் மட்டும், ரூபாய் 172.3 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த தகவலைத் தெரிந்து கொண்ட அஜித் குமார் ரசிகர்கள், இது தமிழ் நாடு மட்டும் இல்லை, தல நாடு எனவும் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X