Good Bad Ugly Box office: 5வது நாளில் குட் பேட் அக்லி படத்தோட வசூல் எவ்வளவு வரும் தெரியுமா?

சென்னை: மார்க் ஆண்டனி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த படம் தான் குட் பேட அக்லி. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.10ந் தேதி வெளியான திரைப்படம் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது. இந்த படத்தின் ஐந்தாவது நாள் குறித்த வசூல் விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த கதை அவருக்கு பிடிக்காததால், அஜித் அதற்கு நோ சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்து, மகிழ் திருமேனி அந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான பிறகும், படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாததால், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதையடுத்து, இந்த படம் பெங்கல்பண்டிகைக்கு வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளிவிற்கு வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம்,அஜித் படத்திற்குரிய மசாலா அந்த படத்தில் இல்லாதது தான்.

good bad ugly Ajith box office

குட் பேட் அக்லி: அஜித் நடிப்பில் தொடர்ந்து ''சீரியசான'' படங்களுக்கு மத்தியில், ஜாலியான ஒரு படமாக குட் பேட் அக்லி படம்10ந் தேதி வெளியானது. த்ரிஷா இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து இருக்கிறார். அவர் மட்டுமின்றி, அர்ஜூன் தாஸ், பிரபு, சுனில், பிர சன்னா, ரெடின் கிங்ஸ்லி, ப்ரியா வாரியர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, சிம்ரன் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையத்துள்ளார். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

படத்தின் கதை: நடிகர் அஜித் குமார், ரெட் டிராகன் என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு பெரிய, கொடூரமான கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். ஆனால், அவரது மனைவி த்ரிஷாவிற்கு தனது கணவர் கேங்க்ஸ்டராக இருப்பது பிடிக்காததால், திருந்தி வந்தால் சேர்ந்து வாழலாம் என்றும், அதுவரைக்கும் தனது மகனை பார்க்கக்கூடாது என்று சொல்ல, அஜித் தன் மனைவியின் வாக்குக்கு கட்டுப்பட்டு சிறைக்கு செல்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்து மகனை பார்க்கும்போது, மகனுக்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்பட்டு, அவன் சிறைக்கு செல்கிறான் எந்த மகனால், திருந்து இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்த அஜித், மீண்டும் கேங்க்ஸ்டராக மாறி எதிரிகளை அழிப்பது தான் படத்தின் கதை.

good bad ugly Ajith box office

விஜய் ரசிகர்கள் குஷி: அஜித் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், அவர் நடித்த படத்தின் பல காட்சிகளை படத்தில் வைத்து ஆடியன்சை குஷிப்படுத்தி உள்ளார். அதே போல, விஜயின் கில்லி படத்தில் வரும் 'காரப்பொரி' காட்சியும், துப்பாக்கி படத்தில் வரும் I am waiting காட்சியைவைத்து விஜய் ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளார். படத்தில் கதை இல்லை, லாஜிக் இல்லை என பல விமர்சனங்கள் வந்தாலும், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

5 நாள் வசூல்: இப்படம் வெளியான முதல் 5 நாட்களில் தமிழகத்தில் ரூ.101 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாளில் ரூ 29.25 கோடியும், இரண்டாம் நாள் ரூ.15.5 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.19.75 கோடியும், நான்காம் நாளில் ரூ 20.50 கோடியை வசூலித்தது. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, ரூ.15.50 கோடியை வசூலித்துள்ளது. முதல் வார இறுதிக்குள் உலக அளவில் ரூ.200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X