Good Bad Ugly: விடாமுயற்சி வாங்கிய அடி.. நொந்துபோன அஜித் ரசிகர்.. ஆறுதல் சொன்ன ஜி.வி.பிரகாஷ்!
சென்னை: அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு முடிவடைந்தது. படம் அறிவிக்கப்பட்டபோது, இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்படியான நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஜி.வி. பிரகாஷ் குமாரிடம் எக்ஸ் பக்கத்தில் புலம்பியுள்ளார். அதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் அளித்த ஆறுதல் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
அஜித் குமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. மேலும் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் டீசர், டிரைலர், படக்குழு வெளியிட்ட பாடல்கள் என அனைத்தும் செம டிரெண்ட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் படத்தில் அஜித்திற்கு மாஸான காட்சிகள் என எதுவுமே இல்லை. இதனால் ரசிகர்கள் செம அப்செட் ஆனார்கள்.

இதனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால், படத்திற்கு முதல் நாளுக்குப் பின்னர் பெரிய அளவிற்கு ரசிகர்கள் வரவில்லை. இதனால் படத்தின் வசூலில் பெரும் அடியை சந்திக்க நேர்ந்தது. இப்படியான நிலையில் அஜித் ரசிகர்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா எனவும் கூட படக்குழு யோசிப்பதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி: இப்படியான நிலையில், குட் பேட் அக்லி படத்தில் முதலில் இசையமைக்க கமிட் ஆனவர் என்றால் அது தேவி ஸ்ரீபிரசாத் தான். புஷ்பா 2 படத்தில் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புஷ்பா 2 படத்தின் பின்னணி இசையில் இருந்தே, தேவி ஸ்ரீ பிரசாத் கழட்டி விடப்பட்டார். இதனால், குட் பேட் அக்லி படத்தில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் இந்தப் படத்தில் கமிட் ஆனவர் தான் ஜி.வி. பிரகாஷ் குமார்.

ஜி.வி: குட் பேட் அக்லி படத்திற்காக ஏற்கனவே சில பாடல்களை உருவாக்கி கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார், சில தினங்களுக்கு முன்னர் குட் பேட் அக்லி படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளைத் தொடங்கினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரிடம், விடாமுயற்சி படம் கொடுத்த ஏமாற்றத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர் கேள்வி: அதாவது ரசிகர் எக்ஸ் பக்கத்தில், " ப்ரோ எங்களோட கடைசி நம்பிக்கை Good Bad Ugly மட்டும் தான்.. அந்த மியூசிக் நெருப்பை சேர்த்து விடுங்க தியேட்டர் சிதறட்டும்" என ஜி.வி. பிரகாஷ் குமாரின் பதிவில் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், " தீயா வேலை செஞ்சுட்டு இருக்கேன். அதை நீங்க சீக்கிரமே தியேட்டரில் பார்ப்பீர்கள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இவரது இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











