GBU Box Office: இலங்கையில் வசூலை அள்ளிய குட் பேட் அக்லி.. அஜித்திற்கு இப்படி ஒரு ஓபனிங்கா!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை ஆடிக்கொண்டுள்ள படம் குட் பேட் அக்லி. அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 63 வது படம் இது. இந்த படத்தை அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படம் வசூல் வேட்டை ஆடி வரும் நிலையில், இலங்கையில் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. அஜித்தின் மாஸான கம் பேக் படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தின் முந்தைய படங்களின் ரெபரன்ஸ்கள் எல்லாம் வைத்து படத்தை தரமான கம்பேக் படமாக கொடுத்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். இது மட்டும் இல்லாமல் படத்தில் இடம் பெற்ற ரெட்ரோ பாடல்களும் படத்திற்கு உதவியதால் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடித் தீர்த்தனர்.

அஜித்தை மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் மாஸான காட்சிகளில் பார்த்ததால் மிகவும் உற்சாக மடைந்தனர். படம் முதல் வாரம் முழுவதும் பெரும்பாலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத்தான் ஓடியது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும் படத்தை வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று பார்த்தார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தார்கள். படத்தின் திரைக்கதை குறித்து பலருக்கும் விமர்சனங்கள் இருந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவான அனுபவத்தைக் கொடுத்தது.
அப்லாஸ்: படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் பல காட்சிகளை ரசித்து கொண்டாடினார்கள். குறிப்பாக அஜித்தின் ஓப்பனிங் காட்சிகள், சிம்ரன் கேமியோ காட்சிகள், அர்ஜுன் தாஸ் இண்ட்ரோ என பல காட்சிகளைக் கூறலாம். இது மட்டும் இல்லாமல் அஜித் படம் முழுவதும் பல பஞ்ச் டயலாக்குகள் பேசியிருந்தார். குறிப்பாக க்ளைமேக்ஸில், ' டெத்தே நம்ம கண்ணு முன்னாடி வந்தாலும் நம்ம கெத்த மட்டும் விட்டுக் கொடுக்க கூடாது' என்ற டயலாக் எல்லாம் அப்லாஸ்களை அள்ளியது.

ஜி.வி: படத்திற்கு இன்னொரு பலம் என்றால் பின்னணி இசையும் பாடல்களும் தான். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஜி.வி. பிரகாஷ் குமார் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அஜித்திற்காக அவர் பார்த்து பார்த்து அமைத்த பின்னணி இசை தியேட்டரையே அதிர வைத்தது.
இலங்கை வசூல்: படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது. மேலும் வசூலை அள்ளிக் கொண்டு இருப்பதால் படக்குழு திருப்திகரமாக உள்ளது. படம் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் ரூபாய் 172.30 கோடிகள் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் இலங்கையில் ரூபாய் 12 கோடிகள் வசூல் செய்துள்ளதாம். இந்திய மதிப்பில் இது ரூபாய் 4 கோடிகள் தான் என்றாலும், இலங்கையில் அஜித்தின் படம் இவ்வளவு வசூலிப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. மொத்தத்தில் குட் பேட் அக்லி வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி வருகிறது. இது மட்டும் இல்லாமல் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











