GBU Teaser Record: 12 மணி நேரத்தில் GBU டீசர் செய்த சம்பவம்.. வெயிட்டைக் காட்டிய அஜித் ரசிகர்கள்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று அதாவது, பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டீசருக்காக ஆவலாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ராஜ விருந்து வைத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். டீசர் சரியாக மாலை 7.03க்கு ரிலீஸ் ஆனது. டீசர் 12 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மைத்ரீ மூவிஸ் தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். படம் குறித்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்து வருகிறது. டீசரை ரசிகர்கள் பலமுறை பார்த்து வருகிறார்கள்.

நேற்று வெளியான டீசர் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால், பல தியேட்டர்களில் டீசர் திரும்ப திரும்ப திரையிடப்பட்டது. டீசரை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள் அனைவரும் திருப்தியாக வெளியே வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்குமாரின் சம்பவம் இருக்கிறது எனக் கூறினார்கள்.
GBU டீசர்: மேலும் டீசர் முழுவதும் அஜித் குமார் தான் இருந்தார். அவருக்கான மாஸான காட்சிகள், மாஸான டயலாக்குகள், மாஸான லுக்குகள் என மொத்த டீசரும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. பார்த்த அனைவருமே அஜித்தை கொண்டாடி வருகிறார்கள், மேலும் விடாமுயற்சி படத்தில் நாங்கள் எதிர்பார்த்த அனைத்துமே இந்த படத்தில் இருக்கிறது. கோலிவுட்டின் புது கலெக்ஷன் ரெகார்டை இந்த படம் பிடிக்கும் எனக் கூறிவருகிறார்கள்.
சாதனை: டீசர் ரிலீஸ் ஆகி 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் 12 மணி நேரத்தில் எந்த படத்தின் டீசரும் டிரைலரும் இந்த அளவிற்கு பார்வையாளர்களைப் பெற்றதில்லை. இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் லியோ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் எட்டியது. அப்படி இருக்கும்போது, குட் பேட் அக்லி டீசர் 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதால், 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள்: மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் குமார் டானாக நடித்துள்ளார், இந்த படத்தில் அவருக்கு மாஸான காட்சிகள் எல்லாம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் இதற்கு முன்னர் நடித்து வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களின் ரெஃபரன்ஸ் இந்தப் படத்தில் உள்ளதால், அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











