“பில்லா லொகேஷனுக்கு 17 ஆண்டுகளுக்கு பின் ரீ என்ட்ரி”.. மலேசியாவில் சேவல் கொடியை பறக்கவிட்ட அஜித்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், கார் பந்தயத்திலும் தனக்கென்று தனி அடையாளத்தை அமைத்துக்கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அஜித்குமார். ஒரு நடிகராக எந்தளவிற்கு பிசியாக இருக்கின்றாரோ அதே அளவிற்கு கார் பந்தயங்களிலும் செம பிசியாக இருக்கிறார்.
தற்போது, அஜித்குமார் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H Series International Car Race போட்டியில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ளார். உலகத்தரம் வாய்ந்த இந்த endurance ரேஸில் உலகம் முழுவதும் இருந்து சிறந்த ரேசர்கள் பங்கேற்க உள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் பிரபலமான முகமாக அஜித் இடம்பெறுகிறார் என்பது ரசிகர்களுக்கு பெருமையான செய்தியாக அமைந்துள்ளது.

மலேசியாவில் சாமி தரிசனம்: மலேசியா சென்றடைந்த அஜித், போட்டிக்கு முன்பாக மலேசியாவின் பிரபலமான பத்து மலை முருகன் கோயிலுக்கு சென்ற, சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த கோயிலில் தான், அஜித் நடித்த "பில்லா" திரைப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நினைவுகள் ரசிகர்களிடம் அஜித் பகிர்ந்து கொண்டார். அஜித்தின் கோவில் தரிசன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோரைவை பார்த்த அஜித் ரசிகர்கள் "பில்லா லொகேஷனுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்டர் ரீ என்ட்ரி" என்றும், "மோட்டார் ஸ்போர்ட்ஸிலும், ஆன்மிகத்திலும் ரோல் மாடல்" என்றும் "தலை எங்கே போனாலும் தமிழர்களுக்கு பெருமை" போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அஜித் 64:அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு ஏகே 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கும் என ஆதிக் அறிவித்துள்ளார். அது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











