இதயத்தின் தலைவி நீ...மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அஜித்..ரொமான்டிக் போட்டோ!

சென்னை : நடிகர் அஜித் மனைவி ஷாலினியை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தல என்றாலே மாஸ்... அந்த மாஸ் யாருனா நம்ம அஜித் தான். அஜித்தின் எளிமை, அமைதியான பேச்சு, பண்பு என அனைத்திற்கும் என்றும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவே இருக்கிறார் நடிகர் அஜித்.

பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவே இருக்கிறார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த படம் தொடங்கும் போது கொரோனா தொடங்கியதால், படம் அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்த போது, கால்பந்தாட்ட மைதானம், கிரிக்கெட் மைதானம் என அனைத்திலும் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்துப்போனார்கள்.

200 கோடிக்கும் மேல் வசூல்

200 கோடிக்கும் மேல் வசூல்

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்பு இடையே இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24 திரைப்படம் வெளிவந்தது. பைக் ரேஸ் சாகசம், அம்மா சென்டிமெண்ட், தம்பி சென்டிமெண்ட் என வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. வலிமை படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்தது.

துணிவு

துணிவு

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பிக்பாஸ் பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இதயத்தின் தலைவி நீ

இதயத்தின் தலைவி நீ

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த புகைப்படம் பிரான்ஸில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் விதவிதமான கேப்ஷன் கொடுத்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

அஜித்தின் மனைவியுமான ஷாலினி அண்மையில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதை நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தினர் கொண்டாடினர். இந்நிகழ்வில் அஜித், ஷாலினி, குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக், மைத்துனர் ரிச்சர்டு ரிஷி, ஷாம்லி கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X