Ajith 64: சம்பள விஷயத்தில் முரண்டு பிடிக்கும் அஜித்.. இழுத்துக்கொண்டே போகும் படம்!
சென்னை: கார் பந்தயங்களுக்காக துபாயில் இருக்கும் அஜித் குமார் இன்னும் சில நாட்களில் சென்னை திரும்ப இருக்கிறார். இவர் திரும்பி வந்ததும் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அஜித் சம்பள விஷயத்தில் முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டின் முதல் பாதிக்குள் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட்பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனது. அந்த படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சிம்ரன், சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு என பலர் நடித்திருந்தனர். இயக்குநர் ஆதிக்ரவிசந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து படத்தை ரசிகர்களுக்கு பிடித்தபடி எடுத்து இருந்தார்.

முரண்டு பிடிக்கும் அஜித்: 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதையடுத்து அஜித்தின் 64வது படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் Anil Sunkara பிரம்மாண்ட பட்ஜெட்டி தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மகேஷ் பாபுவின் Nenokkadine மற்றும் Sarileru Neekevaru உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் அளித்த கூறியிருந்தார். ஆனால், பிப்ரவரி மாதம் முடிந்த பிறகும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இன்னும் சில நாட்களில் அஜித் சென்னை திரும்ப இருக்கும் நிலையில், அஜித் சம்பள விவகாரத்தில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதால் அஜித் படம் இன்னும் தொடங்காமலே இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்களோ... அஜித் 64 படம் குறித்து இன்னும் அப்டேட் வரவில்லை, இவர் என்ன தான் செய்கிறார் என கோபத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











