என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வெச்சாங்க.. காதல் மன்னன் பட நடிகை அதிர்ச்சி தகவல்!
சென்னை: காதல் மன்னன் படத்தில் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள் என்று நடிகை மானு தெரிவித்துள்ளார்.
1998ம் ஆண்டு இயக்குநர் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் படம் வெளியானது. இப்படத்தில் விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கிரிஷ் கர்னாட், கரண், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் அஜித்தின் ஆணழகன் இமேஜுக்கு வலுசேர்த்ததோடு அவருடைய ஆக்ஷன், நகைச்சுவை, உணர்வுபூர்வமான நடிப்புத் திறன்களுக்கும் தீனி போட்டது.
அஜித் நடித்த காதல் மன்னன்: இளமைத் துடிப்பு மிக்க அஜித்தை இந்த படத்தில் பார்த்து பல பெண் ரசிகர்கள் அஜித் பின்னால் பித்துபிடித்து அலைந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற உன்னைப் பார்த்தபின்பு தான், வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே, திலோத்தமா திலோத்தமா பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.
ஹிட் பாடல்கள்: இந்த படத்தில் திலோத்தமா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மானு, அந்த படத்திற்கு பின் எந்த படத்திலும் தென்படாத நடிகை மானு, பல ஆண்டுகளுக்கு பின் பேட்டி அளித்துள்ளார். அதில், என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன், பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
கட்டாயப்படுத்தினார்கள்: அப்போது விவேக் மற்றும் இயக்குனர் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். ஆனால்,படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நடிக்க விரும்பவில்லை. படிப்பில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன் என்றார். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. மேலும், ஒரு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்தது என் அதிர்ஷ்டம் என்றார்.
எளிமையானவர்: 22 ஆண்டுகள் கழித்தும் அந்த படம் இன்னமும் மக்கள் மனதில் பேசப்படுகிறது என்றால் அது அந்த படத்திற்கு கிடைத்த பெருமை, அஜித் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாக இருப்பார். காதல் மன்னன் என் முதல் படம் என்பதால், அவர் என்னை மிகவும் பணிவுடன் கவனித்துக்கொண்டார். நான் எப்போதும் அஜித்தின் பெற்றோர்களுடன் தான் இருப்பேன் என்று காதல் மன்னன் பட அனுபவத்தை இதில் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











