மரியாதை கொடுக்கிறதுலேயும் மனித நேயத்துலேயும் அஜித்குமார அடிச்சிக்க முடியாது.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: விமான நிலையத்தில் அஜித்குமார் வயதானவர்களிடம் காட்டிய மரியாதையும் மனித நேயமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர் நடித்து வரும் துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவது உறுதியாகி விட்டது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் உள்ளிட்டவை ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரமோஷன் தேவையில்லை

புரமோஷன் தேவையில்லை

ஒரு நல்ல படமே அதற்கான விளம்பரத்தை தேடிக் கொள்ளும் என நடிகர் அஜித் கூறியதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களை சற்றே ஏமாற்றி உள்ளது. துணிவு படத்தின் புரமோஷனுக்கு கண்டிப்பாக நடிகர் அஜித் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் உள்ளார் அஜித்.

விமான நிலையம் க்ளிக்ஸ்

விமான நிலையம் க்ளிக்ஸ்

திரைப்பட விழாவில் அஜித்தின் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும், அவர் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன. மேலும், பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், உலகளவில் அவர் பைக் டூர் செல்ல போடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகி உள்ளன.

போனி கபூர் உடன்

போனி கபூர் உடன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த நடிகர் அஜித் தொடர்ந்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை பண்ணி உள்ளார். இந்நிலையில், போனி கபூர் மற்றும் அஜித் சந்தித்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் டிரெண்டாகி வருகிறது.

மரியாதையும் மனித நேயமும்

மரியாதையும் மனித நேயமும்

மரியாதை கொடுப்பதிலும் மனிதநேயம் காட்டுவதிலும் நடிகர் அஜித்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என அவரது ரசிகர்கள் இந்த லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து கொண்டாடி வருகின்றனர். விமான நிலையத்தில் வயதானவர்களை சந்தித்த நடிகர் அஜித் அவர்கள் அருகே சென்று போட்டோக்களை எடுத்துக் கொண்டார். மாற்றுத் திறனாளிகளிடமும் நடிகர் அஜித் காட்டிய பரிவும் பாசமும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

விஜய்யுடன் மோதல்

விஜய்யுடன் மோதல்


ரசிகர்கள் சண்டையை தவிர்க்க ஜில்லா - வீரம் பட கிளாஷுக்கு பிறகு 8 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே எந்தவொரு போட்டியும் இல்லாத நிலையில், இந்த முறை கட்ஸ் உடன் விஜய்யுடன் மோத முடிவு செய்து விட்டார் அஜித். துணிவு படம் நிச்சயம் வலிமை போல சொதப்பாது என்கிற பெரிய நம்பிக்கை தான் இந்த மோதலுக்கு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X