கார் பந்தயத்தில் வெற்றி.. அஜித்தை அப்படி சைட்டடித்த ஷாலினி.. மகள் அனோஷ்காவுக்கு முத்தம்.. சிறப்பு!

சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அதையும் தாண்டி தனது மனதுக்கு ரொம்பவே பிடித்தமான கார் பந்தயத்தில் இன்று வெற்றி வாகை சூடியிருப்பது அவருக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்பது அவர் அங்கே நடந்துக் கொள்ளும் விதத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அஜித் குமாரை ரசிகர்கள் இப்படி பார்த்திருக்கவே முடியாது. தனது படங்கள் வெற்றியடையும் போதும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் போது கூட அஜித் குமார் குழந்தையை போல இப்படி துள்ளி குதித்திருக்க மாட்டார்.

நடிகர் அஜித் குமார் தன்னை பந்தயத்தில் கலந்துக் கொள்ள அனுமதித்த தனது மனைவி ஷாலினிக்கு நன்றி தெரிவித்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளது. எந்தளவுக்கு உயரத்துக்கு சென்றாலும் மனைவியையும் குடும்பத்தையும் ஒரு மனிதன் எப்படி மதிக்க வேண்டும் என்றும் L&T தலைவர் சுப்ரமணியம் அஜித்தின் இந்த வீடியோவை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் அவரையும் சேர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ajith kumar ajith kumar racing shalini

வெற்றிவாகை சூடிய உற்சாகத்தில் தனது குடும்பத்தை பார்த்த நடிகர் அஜித் குமார் தனது அன்பை வெளிப்படுத்திய விதமும் தனது கணவர் நினைத்ததை முடித்துவிட்டாரே என யாருக்கும் தெரியாமல் அவரை ரசித்து ஷாலினி சைட் அடித்துப் பார்க்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமர்க்களமான ஜோடி: விஜய்யுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட 2 படங்களில் ஷாலினி நடித்திருந்தார். ஆனால், அஜித் குமாருடன் அவர் அமர்க்களம் எனும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் மலர கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அஜித் மற்றும் ஷாலினிக்கு 17 வயதில் அனோஷ்கா என்கிற மகள் உள்ளார். ஆத்விக் என்கிற மகனும் உள்ளார்.

ajith kumar ajith kumar racing shalini

3வது இடம்: துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் டீம் கலந்துக் கொண்டது. நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் தனது அணியில் போட்டியிடவில்லை என விலகினாலும் அணியின் உரிமையாளராக தொடர்ந்தார். ஆஸ்திரிய அணியில் சேர்ந்துக் கொண்டு கார் ஓட்டியும் அசத்தினார். இதில், நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து பதக்கத்தை வென்றது. நடிகர் அஜித் குமாரை உற்சாகப்படுத்த ரசிகர்களாக மாதவன், அர்ஜுன் தாஸ், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் துபாய்க்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாதவன் கொடுத்த ஊக்கமும் உற்சாகத்தை எல்லாம் பார்க்கும் போது இப்படியொரு நண்பன் கிடைக்க வேண்டும் என நிச்சயம் பலரும் ஏங்குவார்கள்.

மகளுக்கு முத்தம்: நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் வெற்றிப் பெற்ற நிலையில், தனது மனைவி ஷாலினியை கட்டியணைத்து அவருக்கு நன்றி சொன்னதும், தனது மகள் அனோஷ்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. அஜித் குமார் வெற்றிப்பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தாவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ajith kumar ajith kumar racing shalini

சைட் அடித்த ஷாலினி: தனது கணவர் தனது லட்சியத்தில் வெற்றி பெற்றதை பார்த்து பூரித்துப்போன ஷாலினி மற்றவர்களுக்கு தெரியாத அளவுக்கு தனது கணவர் அஜித்தை சைட் அடித்த காட்சிகளையும் சிலர் வீடியோவாக எடுத்து அமர்க்களம் பட பாடலை மிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். தமிழ் கார் ட்யூட்ஸ் எனும் யூடியூப் சேனல் வீடியோவின் ரீல்ஸ் தற்போது டிரெண்டாகி வருகிறது.

ajith kumar ajith kumar racing shalini

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X