துணிவு படத்தில் அஜித்துக்கு டபுள் ரோலா .. கடைசி நேரத்தில் வெளியான க்ளீன் ஷேவ் லுக்.. அப்போ ஏகே 62?
சென்னை: துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வந்த நடிகர் அஜித் தற்போது திடீரென க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியுள்ள லேட்டஸ்ட் போட்டோ டிரெண்டாகி வருகிறது.
துணிவு படத்தில் நடிகர் அஜித் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தாரை தப்பட்டை கிழியப் போகுது
வரும் பொங்கலுக்கு அஜித் மற்றும் விஜய் என தமிழ் சினிமாவின் 2 டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் தாரை தப்பட்டை கிழியப் போகுது. வாரிசு டீம் மற்றும் துணிவு டீம் இரண்டுமே புதிய போஸ்டர்களையும் தினம் தினம் படங்கள் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு வெறித்தனமாக ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

மீண்டும் க்ளீன் ஷேவ்
வலிமை படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் அஜித் நடித்திருந்த நிலையில், துணிவு படத்தில் தாடி, மீசையுடன் டெரர் லுக்கில் அஜித் படு மாஸாக காட்சி அளித்தார். இந்நிலையில், மீண்டும் பழையபடி க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் அஜித் மாறியுள்ள புதிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. தேவ் சக்திவேல் எனும் செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் அஜித்தின் இந்த புதிய லுக்கை உருவாக்கி இருக்கிறார்.

டபுள் ஆக்ஷனா
தாடியுடன் ஒரு லுக் மற்றும் தாடி இல்லாத ஒரு லுக்கை பார்த்த ரசிகர்கள் அஜித் துணிவு படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறாரா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இல்லை இந்த லுக் துணிவு 2வுக்கான லுக்காக இருக்குமா? இப்போதெல்லாம் எல்லா படங்களும் பார்ட் 2 கிளைமேக்ஸ் உடன் முடிகிறதே என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளனர்.

ஏகே 62 கெட்டப் இதுதானா
துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்து விக்னேஷ் சிவன் உடன் நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் இதே லுக்கில் தான் அஜித் நடிக்கப் போகிறார் என்பதும் கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் தை மாதம் முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த லுக் அஜித்தின் அடுத்த படத்துக்கு எந்தளவுக்கு செட் ஆகும் என்கிற விவாதங்களும் அரங்கேறி வருகின்றன.

குவியும் ட்ரோல்
க்ளீன் ஷேவ் லுக் அஜித்துக்கு இனிமேல் செட் ஆகாது என்றும் பார்க்கவே நல்லா இல்லை என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித் எப்படி இருந்தாலும், ஹேண்ட்ஸம் தான் க்ளீன் ஷேவ் லுக்கிலும் படு மாஸாக இருக்கிறார் அஜித் என அஜித் ரசிகர்கள் அந்த புதிய புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் #Ajithkumar𓃵 ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











