Ajith: தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அஜித்.. பெயர் என்ன தெரியுமா? அடடே முதல் படம் அதுவா? போடு வெடிய!
சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சர்வதேச கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் பலரும் அவர் எப்போது மீண்டும் படங்களில் கதாநாயகனாக நடிப்பார் என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் அஜித் குமார் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியான படமான குட் பேட் அக்லி படம் தான். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக தியேட்டருக்கு சென்று தல தரிசனம் பார்த்தது என்றால் அது மங்காத்தா ரீ ரிலீஸின் போது தான்.

ஆனாலும் அஜித் ரசிகர்களுக்கு அஜித் மீண்டும் எப்போது படம் நடிப்பார்? என்ற கேள்வி இருந்து கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் திரைத்துறையில் உலா வந்த தகவல்கள் என்றால், அஜித் சம்பளம் அதிகமாக கேட்கிறார். அதனால் தான் சில தயாரிப்பு நிறுவனங்கள் படம் பண்ண ஆசைப்பட்டாலும், பிசினஸ் செய்வது சிரமம் என்று தெரிவித்து, அஜித் உடன் படம் பண்ணாமல் உள்ளார்கள் என்று எல்லாம் தகவல்கள் வந்தது.
இயக்குநர் யார்?: ஆனால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குநர் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இயக்குநர் சிறுத்தை சிவா தான் அஜித்தின் அடுத்த இயக்குநர் என்றும் பேச்சுகள் அடிபட்டது. இப்படி இருக்கையில் நடிகர் அஜித் குமார் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாகவும், அதற்காக ரூபாய் 2 லட்சத்தை செலுத்தி வாழ்நாள் உறுப்பினராக இணைந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்: அஜித் குமார் தரப்பில் பதிவு செய்யப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி என்ற பெயரில் தான் தொடங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது திரைத்துறையில் இது தொடர்பாக பேசப்பட்டு வந்தாலும், பலருக்கும் எழுந்துள்ள கேள்வி, இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஜித் தனது படத்தை தானே தயாரிக்கப் போகிறாரா? இல்லை தனது கார் ரேஸ் பந்தையத்தை ஆவணப்படமாக உருவாக்கி வந்ததை, அடுத்து அதை படமாகவும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததாக கூறப்பட்டது. இதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்காக, முறையாக தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்து படத்தை வெளியிட அஜித் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











