அப்போ சிறுத்தை சிவா இல்லையா?.. அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குநரா?
சென்னை: துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் படத்தை பண்ணப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது.
அதன் பின்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்புவை வைத்து இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டது. இன்னமும் அந்த படமும் ஆரம்பிக்காமல் கிடப்பில் உள்ளது. சிம்புவே அந்த படத்தை தனியாக தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது அஜித்தை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் பாகுபலி போன்ற படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வலம் வருகின்றன.

சிம்புவின் படத்தை முடித்துவிட்டு அஜித்தின் படத்தை ஆரம்பிக்கப் போகிறாரா? அல்லது அஜித் மற்றும் சிம்புவை வைத்து அதே படத்தை உருவாக்கப் போகிறாரா என்பது குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம ஸ்பீடில் அஜித் குமார்: அஜித் நடித்த படங்கள் ரிலீஸ் ஆக தாமதமானாலும் அஜித் புதிய படங்களில் கமிட்டாகி வேக வேகமாக படங்களை முடித்துக் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக விடாமுயற்சி தாமதமான நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அதிரடியாக குட் பேட் அக்லி படத்தையே முடித்துக் கொடுத்துவிட்டார். உடல் எடையும் ஸ்லிம்மாக மாறிய நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடிக்கப் போகிறார் என்கின்றனர்.
சிறுத்தை சிவா இல்லை: அண்ணாத்த படம் தோல்வியடைந்தாலும் சிறுத்தை சிவாவை சூர்யா மலை போல நம்பி கங்குவா படத்தைக் கொடுத்ததற்கு அவரால் என்ன பண்ண முடியுமோ பண்ணிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அஜித் குமார் ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் 4 படங்களில் நடித்துள்ள நிலையில், 5வது முறையாக இணைய வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
தேசிங்கு பெரியசாமி படம்: சிம்புவின் 48வது படத்தை இயக்க காத்திருக்கும் தேசிங்கு பெரியசாமி ரொம்ப வருஷமாக படங்களே இல்லாமல் ப்ரீ புரொடக்ஷனுக்கு மட்டுமே வேலை செய்து வரும் நிலையில், சமீபத்தில் அஜித்திடம் ஒரு ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கி விட்டார் என்றும் ரொம்ப லேட் பண்ண வேண்டாம் சீக்கிரம் ஆரம்பித்து விடலாம் என்றும் அஜித் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். கூடிய விரைவில் அந்த படம் குறித்த அசத்தலான அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











