ரஜினி, கமல், விஜய் நேரில் அஞ்சலி.. போனில் மட்டும் வருத்தம் தெரிவித்த அஜித்.. இதுதான் காரணமா?
சென்னை: 84வயதான கவுண்டமணி, 80 வயதான இளையராஜா, 73 வயதை கடந்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் வயதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி விட வேண்டும் என வந்து சென்றுள்ளது ரசிகர்களையும் பொதுமக்களையும் நெகிழச் செய்துள்ளது. மேலும், நடிகர் விஜய் எல்லாம் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு நேற்று இரவே வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.
விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுன் நேரில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். கமல்ஹாசன், சரத்குமார், சீமான் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் வரமுடியாமல் வெளிநாடுகளில் இருக்கும் சூர்யா, விஷால் உள்ளிட்டோர் வீடியோ போட்டு இரங்கல் தெரிவித்தனர். ஆனால், நடிகர் அஜித் தற்போது தொலைபேசி மூலமாக அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொலைபேசியில் அஜித் ஆறுதல்: தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் அஜித் குமார் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் நேரில் வருவார் என காலையில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்த மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
ரஜினி, கமல், விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். இளையராஜா, கவுண்டமணி, விடாமுயற்சியில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
விஜய்க்கு நேர்ந்தது போல: நடிகர் விஜய் நேற்று இரவு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கினார். மேலும், விஜய் மீது காலணி வீசப்பட்டதாகவும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதையெல்லாம் பார்த்து விட்டுத் தான் அஜித் நேரில் வருவதை தவிர்த்து விட்டாரா? என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளில் நடிகர் அஜித் வந்து தனது வருத்தத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பிரேக் விடப்பட்டு இருந்தாலும், நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் துபாயில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் தான் அஜித் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











