AK Moto Ride: 'ஏகே மோட்டோ ரைடு'- பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்..ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: AK Moto Ride ( அஜித் பைக் சுற்றுலா நிறுவனம்) 'ஏகே மோட்டோ ரைடு' என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக அஜித் குமார் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடிக்காமல் அதனை மாற்ற சொல்ல விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறினார்.

Ajithkumar opens a MotorCycle Touring Company AK Moto Ride

மகிழ் திருமேனியின் விடாமுயற்சி: இதனையடுத்து அஜித்தின் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. த்ரிஷா படத்தில் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் வேறு யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் சுற்றுப்பயணம்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் கதை இறுதி வடிவம் பெறுவதற்கு கால தாமதம் ஆனதால் பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை தொடங்கினார் அஜித். தனது முதல்கட்ட பயணத்தை நேபாளம், பூடான், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்டார். சில வாரங்களுக்கு முன்னர் தனது பயணத்தை முடித்துச் என்னை திரும்பினார். அதனையடுத்து வரும் நவம்பர் மாதத்திலிருந்து இரண்டாம் கட்ட பயணத்தை ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் புதிய தொழில்: இந்நிலையில் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள்,, திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள். இந்த மேற்கோளை நான் நீண்டகாலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்.

ஏகே மோட்டோ ரைடு: மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏகே மோட்டோ ரைடின் ரோக்கம் என்ன?: இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

Ajithkumar opens a MotorCycle Touring Company AK Moto Ride

பாதுகாப்பு மற்றும் செளகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்ளம மற்றும் செயல்திறனை உறுதி செய்து உன்னிிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா குப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

வாழு வாழ விடு: தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரியான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதிவரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X