தாயின் உடலை தோளில் சுமந்த அஜித்.. பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது!
சென்னை: நடிகரும், கார் ரேசருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 89) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நடிகர் மின்மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தாயின் உடலை அஜித் தோளில் சமந்து சென்று இறுதி சடங்குகளை செய்தார். அவரது மறைவு திரையுலகினரையும் அஜித்குமார் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வயது மூப்பு காரணமாக சில உடல்நலக்குறைவுகளை சந்தித்து வந்த மோகினி மணி, நேற்று காலை உயிரிழந்தார்.மோகினி மணி, மறைந்த பி.எஸ். மணி அவர்களின் துணைவியார் ஆவார். அஜித்குமார், அனில்குமார், அனுப் குமார் ஆகியோரின் தாயாரான இவர், குடும்பத்தின் தூணாக இருந்தார். அஜித்தின் தந்தை பி.எஸ். மணி கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் நேற்று மோகிணி மணி உயிரிழந்தார்.
அஜித்தின் அம்மா: அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மோகினி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தகனம் செய்யப்பட்டது: இதனைத் தொடர்ந்து இன்று காலை மோகினி அம்மாளின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். மின்மயான வளாகத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது, தாயாரின் உடலை நடிகர் அஜித் குமாரும் அவரது சகோதரர்களும் தோளில் சுமந்து சென்றனர். அந்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க வைத்தது. எந்த ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் வெளிப்படுத்தாமல், ஒரு சாதாரண மகனாக தாயின் உடலை சுமந்து சென்ற அஜித்தின் அந்த தருணம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து குடும்ப மரபுப்படி இறுதி ஈமச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர் மோகினி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் பிரிவால் கலங்கிய அஜித் குமாருக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications