ஷங்கரின் வேள்பாரி படத்தில் அஜித் குமார் நடிக்கப் போகிறாரா?.. அதுமட்டும் நடந்தா வேறலெவல் தான் போங்க!

சென்னை: நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களைத் தொடர்ந்து முழுநேர அரசியல்வாதியாக பயணிக்க முடிவெடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார்.

நடிகர் விஜய்யின் தளபதி 69-வது படத்தை எச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே நடிகர் அஜித்குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி அஜித் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தினார்.

Ajith Kumar Shankar Velpaari H Vinoth Good Bad Ugly

இந்நிலையில், சமீபத்தில் எச். வினோத்துடன் நடிகர் அஜித் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விஜய் படத்தை எப்போ முடிக்கப் போறீங்க என்றெல்லாம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அசுர வேகத்தில் அஜித்: விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை விரைவில் முடிக்க நடிகர் அஜித்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் அஜித்குமார் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிகர் அஜித் தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மீண்டும் எச். வினோத்: நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அஜித்குமாருக்கு மூன்று படங்களைக் கொடுத்த எச். வினோத்துடன் மீண்டும் இணையும் முயற்சியில் அஜித்குமார் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், தளபதி 69 படம் எப்போது துவங்கும் அதன் பணிகள் எப்படி போகின்றன. அடுத்து எப்போது நாம் படம் பண்ணலாம் என்றெல்லாம் அஜித் குமார் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஷங்கரின் வேள்பாரி: எச். வினோத் உடன் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அஜித் குமார் இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர். கமல்ஹாசனின் இந்தியன் 2, ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களை முடித்த ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி படத்தை ஆரம்பிக்கப் போவதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் அஜித் நடித்தால் நல்லா இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியுள்ளன. விஜய்யை வைத்து ஷங்கர் நண்பன் படத்தை இயக்கியுள்ள நிலையில், அஜித்துடன் இதுவரை இணைந்து அவர் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2, 3: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த் நடித்த இந்தியன் 2 மற்றும் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. அந்த இரண்டு படங்களும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தால் ஷங்கருடன் அஜித் குமார் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறுகின்றனர். அடுத்த மாதம் இந்தியன் 2 வெளியாக உள்ள நிலையில், இந்தியன் 3 படம் குட் பேட் அக்லியுடன் போட்டிப் போடாது என்றும் குடியரசு தினத்தை குறி வைத்து ஜனவரி 26ம் தேதி தான் வெளியாகும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வேள்பாரி படத்தில் அஜித் இணைவாரா? அல்லது வேறு ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X