அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வருகிறது விடாமுயற்சி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ளதாக சூடான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என வரிசையாக மூன்று படங்களில் நடித்து வந்த அஜித்குமார் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ரோடு ஆக்சன் படமான விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாகவும் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

Ajith Kumar plans to release Vidamuyarchi movie in this April?

விலகும் விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவுக்கு நடிகர் விஜய் ரெஸ்ட் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவார் என்றும் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டார்கெட் செய்த அஜித்: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் சினிமாவில் பலமாக கால் ஊன்றி உள்ள நிலையில், விஜய்யின் கேப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நடிகர் அஜித் டார்கெட் செய்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி சூட்டிங்: அஜர் பைஜானில் கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்ததாக ஹைதராபாத்தில் சில நாட்கள் செட்டு போட்டு படப்பிடிப்பு நடத்தப்படும் என்ன தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஒட்டுமொத்த விடாமுயற்சி படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறுகின்றனர்.

சம்மர் ரிலீஸ்: மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஏப்ரல் மாத இறுதியிலேயே படத்தை வெளியிட அஜித் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். மேலும், பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலத்த போட்டி: சூர்யாவின் கங்குவா, கமல்ஹாசனின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, ரஜினிகாந்தின் வேட்டையன் என பல படங்கள் இந்த ஆண்டு சம்மரை டார்கெட் செய்துள்ள நிலையில், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் போட்டிக்கு ரெடியாக உள்ளதாக கூறுகின்றனர். இதுவரை அப்டேட் கிடைக்காமல் காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி ஹேப்பி ஆக்கி வரும் நிலையில், பிப்ரவரி மாதம் முதல் அப்டேட்களை லைகா அடுக்கப் போவதாகவும் சொல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X