Ajith World Tour: உலக பைக் டூர்.. அஜித் எடுத்த அதிரடி முடிவு.. அப்போ விடாமுயற்சியின் நிலைமை?

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் ஆரம்பிக்காத நிலையில், தனது உலக பைக் டூர் அறிவிப்பை அஜித் வெளியிட்டுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

வரும் ஜூன் மாதம் முதல் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தனது உலக பைக் டூரை நடிகர் அஜித் ஆரம்பிக்கப் போவதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

Ajith Kumar plans to start his world bike tour from this date

நேபாளம், பூட்டான் ஓவர்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களே அடுத்து அடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், விடாமுயற்சி படத்தை அறிவித்துள்ள அஜித் அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கிலேயே சுற்றி வரும் ஆசையை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் முதல் கட்டமாக நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பைக் டூரை தற்போது முடித்து விட்டாராம். அந்த சந்தோஷமான அறிவிப்பை சுரேஷ் சந்திரா தற்போது தெரிவித்துள்ளார்.

Ajith Kumar plans to start his world bike tour from this date

உலக பைக் டூர் எப்போ ஆரம்பம்: அடுத்ததாக முழு வீச்சில் உலகம் முழுவதும் நடிகர் அஜித் தனது பைக்கில் சுற்றுலா செய்யும் திட்டத்தையும் தற்போதே பக்காவாக பிளான் செய்து வைத்திருக்கிறார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதற்கான பயணத்தை அஜித் ஆரம்பிக்கப் போவதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா சற்று முன் ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

விடாமுயற்சி அதற்குள் முடிந்து விடுமா?: அடுத்த வாரம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகப் போவதாகவும் அஜித் நடிக்கும் காட்சிகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajith Kumar plans to start his world bike tour from this date

நவம்பர் மாதம் அஜித் உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல உள்ள நிலையில், அதற்குள் விடாமுயற்சி படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், விடாமுயற்சியின் ஷூட்டிங் தாமதம் ஆனால், திட்டமிட்டபடி தனது பைக் டூருக்காக அஜித் கிளம்பிவிடுவார் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை அதற்குள் முடித்து விட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X