Vidamayurchi: விடாமுயற்சி ஹீரோயின்களுடன் அஜித்.. கூட யாரு இருக்காரு பாருங்க.. ஷூட் எப்போ முடியுது?
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அஜர்பைஜானில் பல மாதங்கள் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்ததாக ஹைதராபாத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களுக்கான படப்பிடிப்பில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் நடிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட பிரத்யேக புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் இரண்டு படங்களுக்காக கடுமையாக உழைத்து வருவதாக கூறுகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களில் நடித்து வந்த அஜித் குமார், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இயக்குநரை அஜித் மாற்றி விட மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார்.
ஓய்வறியாத உழைப்பு: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி உழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் செய்யவும் குட் பேட் அக்லி படத்தை திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியிடவும் ஓய்வறியாமல் உழைத்து வருகிறார் அஜித் என்கின்றனர்.

த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா: அர்ஜுன், ஆரவ், த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா என விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. நடிகை த்ரிஷா இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.
த்ரிஷா ட்வீட்: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என தொடர்ந்து அஜித் படங்களில் நடித்து வரும் த்ரிஷா தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார். கோட் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டு ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











