Ajith: தலனு கத்திய ரசிகர்.. ஒரே ஒரு பார்வையில் ஆஃப் செய்த அஜித்.. மொரட்டு வீடியோ!
மலேசியா: நடிகர் அஜித் மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசியன் லீ மென்ஸ் கார் ரேஸில் கலந்து கொண்டு வருவதில் இருந்து அவரைப் பார்க்க, கார் ரேஸ் நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான ரசிகர்கள் அஜித்தை பார்த்தால் தல, ஏ.கே என்று கத்திக் கொண்டு இருக்கிறார்கள். தொடக்கத்தில் ரசிகர்களைப் பார்த்து கையசைத்து பறக்கும் முத்தங்களை வாரி கொடுத்துக் கொண்டு இருந்தார் நடிகர் அஜித்.
ஆனால், ஒரு கட்டத்தில் ரசிகர்களின் ஆரவாரம் மற்ற கார் ரேஸர்களை தொந்தரவு செய்வது போல இருப்பதை உணர்ந்து ரசிகர்கள் கத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். அதையும் மீறி ஒரு ரசிகர் கத்த, அதற்கு அஜித் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது அஜித் குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கார் ரேஸில் தான் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து தான் தனது 64வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரியிலும் கார் ரேஸில் தான் கவனம் செலுத்தவுள்ளார். இவரது 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

மொரட்டு வீடியோ: இப்படி இருக்கும்போது மலேசியாவில் அஜித் கார் ரேஸ் நடக்கும் சர்க்யூட்டுக்கு வந்த போது, அவரைக் காண காத்திருந்த ரசிகர் ஒருவர், தல என்று கத்தினார். அதுவும் ரொம்பவும் சத்தமாக கத்தினார். இது அஜித் காதில் கேட்டதும், முறைத்துக் கொண்டே, கழுத்தைக் காட்டி, சத்தம் போட வேண்டாம் என்று எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதைப் பகிரும் சில இணையவாசிகள், அஜித் சாரின் லுக்கைப் பார்த்தாலே மாஸாக உள்ளது. மொரட்டு வீடியோவாக இருக்கிறதே என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
அஜித்- விஜய்: நடிகர் அஜித் தற்போது மலேசியாவில் இருப்பதால் அடுத்த வாரத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே அஜித்தை சந்தித்து விஜய் அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மட்டும் நடந்து, ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அஜித் கலந்து கொண்டால் தரமான சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











