ரெட் டி-ஷர்ட் சும்மா டாலடிக்குதே.. சென்னை வந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங் எந்த தேதியில் ஆரம்பம்?

சென்னை: நடிகர் அஜித் வெளிநாட்டில் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவர் எப்போது சென்னைக்கு திரும்புவார் என்றும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் ஆகும் என ரசிகர்களும் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் சென்னைக்குத் திரும்பி விட்டதாக புகைப்படங்களுடன் தற்போது விடாமுயற்சி ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியானது.

Ajith Kumar returns to Chennai airport photos trending and Vidamuyarchi will start on this date

துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்துக்காக ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படம் இன்னும் ஆரம்பமே ஆகாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

விடாமுயற்சிக்கு வெயிட்டிங்: விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படம் செம டஃப் போட்டியாக இந்த ஆண்டு வெளியான நிலையில், அடுத்ததாக லியோ படத்துக்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், லியோ படத்தின் ஷூட்டிங்கே முடிந்து வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே இன்னமும் ஆரம்பிக்கவில்லை.

ரெட் டி-ஷர்ட்டில் ரிட்டர்ன்: நடிகர் அஜித் வெளிநாடுகளில் பைக் டூர் செய்து வருகிறார் என்றும் அவர் சென்னைக்குத் திரும்பியதும் தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னைக்கு நடிகர் அஜித் சிகப்பு நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் கொடுத்த என்ட்ரி வீடியோக்களும் போட்டோக்களும் வெளியாகி #VidaaMuyarachi ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

செம க்யூட்டாக நடிகர் அஜித் சிரித்தபடியே ரசிகர்களுடனும் விமான நிலை ஊழியர்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அந்த ஹாஷ்டேக்கில் அதிகம் டிரெண்டாகி வருகிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் ஆரம்பம்: நடிகர் அஜித் சென்னை திரும்பி உள்ள நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்கும் அனைத்து பணிகளையும் தயார் செய்து வைத்திருக்கிறாராம்.

வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு முதல் கட்டமாக தொடங்கப் போவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்தின் ஷூட்டிங்கை வெறும் 3 மாதத்துக்குள் முடிக்கும் அளவுக்கு ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X