ஏகே 62 பெயர் வருதோ இல்லையோ இது கரெக்ட்டா வருது.. அஜித்தின் உலக சுற்று பயணத்தின் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் உலகத்தை சுற்றப்போகும் பயணத்தின் பெயரை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களும் ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. குறிப்பாக பெரும் எதிர்பார்ப்போடு வந்த வலிமை திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. எனவே மூன்றாவது முறையாக வினோத்தும் - அஜித்தும் இணைந்தனர். படத்துக்கு துணிவு என பெயரிடப்பட்டது. படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.

துணிவு படம் தந்த வெற்றி

துணிவு படம் தந்த வெற்றி

பெரும் எதிர்பார்ப்போடு வெளியான துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. வங்கி மக்களிடம் ஆடும் தகிடுதத்தங்களை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. நீண்ட நாள்கள் கழித்து அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார். இதனால் ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்தும், அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஏகே 62 குறித்த அறிவிப்பு

ஏகே 62 குறித்த அறிவிப்பு

இதற்கிடையே துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித்தின் 62ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி படத்தை இயக்க விருக்கிறார்.

தாமதமாகும் ஏகே 62 படத்தின் அறிவிப்பு

தாமதமாகும் ஏகே 62 படத்தின் அறிவிப்பு

மகிழ் திருமேனி ப்டத்தை இயக்குவார் என அரசல் புரசலாக பேசப்பட்டாலும் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இது தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. படத்தின் கதையும், மேக்கிங்கும் பிரமாண்டமாக இருக்க வேண்டுமென அஜித் விரும்புகிறார் எனவும் அதற்காக மகிழ் திருமேனி கடுமையாக உழைத்துவருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பு லைகா நிறுவனத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

அது ஏகே 62 குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது ரஜினியும் ஞானவேலுவும் இணையும் படத்தின் அறிவிப்பாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் ஏகே 62 படத்தின் அறிவிப்பு நிச்சயம் எல்லோராலும் பேசும்படி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அஜித் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வெளியானது அப்டேட்; ஆனால் ஏகே 62 இல்லை

வெளியானது அப்டேட்; ஆனால் ஏகே 62 இல்லை

இந்நிலையில் அஜித் தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட உலக மோட்டார் சுற்றுப்பயணம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X