Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாஸான டைட்டில்..தீப்பிடித்த சோஷியல் மீடியா..அஜித் 61 போஸ்டர்!
சென்னை : எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.
அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?..இணையத்தில் வெளியான தகவல்..குழம்பிய ரசிகர்கள்!
அஜித் 61
அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற இடங்களின் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில் தான் எச் வினோத் படப்பிடிப்பை நடத்தினார்.
பாங்காங்கில் படப்பிடிப்பு
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, விசாகப்பட்டினம், சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற உள்ளது. இதற்காக லோகேஷன் பார்க்க எச் வினோத் ஏற்கனவே பாங்காங் சென்றுள்ளார். "AK 61" படத்தின் ஷூட்டிங்கும் இப்போதும் பெரும்பாலான அளவில் முடிந்துள்ளது.
விரைவில் படப்பிடிப்பு
அஜித் தனது பைக் பயணத்தை முடித்து விட்டு ஒரு வழியாக சென்னை திரும்பி அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாளையோ அல்லது நாளை மறுதினமோ பாங்காங் செல்ல இருக்கிறார். வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறுப்படுகிறது.
டைட்டில் இதுதான்
நீண்ட நாட்களாக ஏகே 61வது படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இன்று மாலை ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என பட்டிமன்றமே நடந்த நிலையில், அஜித்தின் 61வது படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாஸ் லுக்
கையில் துப்பாக்கியோடு அஜித் மாஸாக இருக்கும் புகைப்படத்தோடு கூடிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தலை முடி ,தாடி என அனைத்தும் வெள்ளையாக உள்ளது, கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் சாய்ந்தபடி மிரட்டலாக இருக்கிறார் அஜித். இந்த போஸ்டரை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!