நண்பர் சுரேஷ் சந்திராவின் தாயார் மரணம் - கூடவே இருந்த ஆறுதல் சொன்ன அஜீத்

Recommended Video

Ajith's Manager mother passed away

சென்னை: நடிகர் அஜீத் குமாரின் நண்பரும், திரையுலகின் மக்கள் தொடர்பு அலுவலருமான சுரேஷ் சந்திராவின் தாயார் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். தகவல் அறிந்த அஜீத் குமார் உடனடியாக விரைந்து சென்று சுரேஷ் சந்திராவின் தாயாரின் உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு ஆறுதல் சொல்லி அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா. பல படங்களில் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர் நடிகர் அஜித் குமாரின் மானேஜராக இருந்து வருகிறார். அமராவதி படத்திற்கு பிறகு அஜித் குமாரின் மானேஜராக மட்டுமின்றி அவரது நண்பராகவும் இன்று வரை தொடர்கிறார்.

Ajith Kumar’s Manager Suresh Chandra’s mother passed away

சுரேஷ் சந்திராவின் தாயார் திருமதி சத்யவதி சுதர்ஷன். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். கடந்த சில காலமாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்தாக ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார் சுரேஷ் சந்திரா.

தனது தாய் தான் அவருக்கு மிக பெரிய இன்ஸ்பிரெஷன் என்று தெரிவித்துள்ளார். தனது தாய் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தவருக்கு அவரின் பிரிவு ஒரு பெரிய இழப்பு. இந்த தகவல் தெரிந்ததும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் அஜித் குமார் தனது மேனேஜரின் தாயார் காலமான தகவல் தெரிந்த உடனேயே மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சுரேஷி சந்திராவின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்போதே, அஜீத் குமார் அவரை போய் பார்த்து ஆறுதல் சொல்லியிருந்தார்.

Ajith Kumar’s Manager Suresh Chandra’s mother passed away

தற்போது சுரேஷ் சந்திராவின் தாயார் மறைவு செய்தி கேட்டு உடனடியாக அவருடைய வீட்டுக்கு சென்று, தாயை பிரிந்த நண்பருக்கு உறுதுணையாய் இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுரேஷ் சந்திராவின் தாயாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு மதுரவாயலில் உள்ள சுதர்ஷன இல்லத்தில் நடைபெறும். சுரேஷ் சந்திராவிற்கு ஃபிலிமிபீட் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X