கார் ரேஸில் அஜித்.. படையெடுத்து சென்று நடிகர்கள் பார்க்க காரணம் என்ன தெரியுமா?
சென்னை: அஜித்குமார் இப்போது கார் ரேஸில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். ஏகே ரேஸிங் என்றொரு டீமை ஃபார்ம் செய்து உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடக்கும் பந்தயங்களில் கலந்துகொள்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவர் எங்கே சென்றாலும் ரசிகர்கள் படையெடுத்து பார்ப்பது போன்று; துபாய்,மலேசியாவில் கோலிவுட் நடிகர்கள், இயக்குநர்களும் சென்று பார்க்கிறார்கள். அதற்கான காரணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் விளக்கியிருக்கிறார்.
அஜித்துக்கு சினிமா மட்டுமின்றி ரேஸிங்கிலும் பெரிய ஆர்வம் இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. கரியரின் ஆரம்பத்தில் அவர் சில ரேஸ்களில் கலந்துகொண்டார். ஆனால் அப்போதெல்லாம் அவரால் முழு கவனத்தையும் ஒருதுறை மேல் செலுத்த முடியவில்லை. ரேஸில் கொஞ்சம் கவனம், சினிமாவில் கொஞ்சம் கவனம் என்று இருந்தார். அதன் காரணமாக இரண்டிலுமே அவர் கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தார் என்பதுதான் உண்மை.
இப்போது முழு கவனம்: அதன் காரணமாக கார் ரேஸை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தினார். அதன் விளைவாக கோலிவுட்டில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக மாறினார். சூழல் இப்படி இருக்க தற்போது அவரது கவனம் ரேஸிங்கில் மீண்டும் சென்றிருக்கிறது. இந்த முறை ஏனோதானோவென்று இல்லாமல் அனைத்தையும் பக்காவாக பிளான் செய்து களமிறங்கியிருக்கிறார். தனி ரேஸிங் டீம் உள்ளிட்டவைகளோடு கலக்கிவருகிறார்.

நேற்று இல்லாத மாற்றம்: ரேஸில் அவர் சென்ற பிறகு அவருக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கின்றன. பொதுவாக பேட்டிகள் எதையும் பெரிதாக கொடுக்கமாட்டார். ஆனால் இப்போதோ ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்; விளம்பரங்களில் நடிக்கிறார். கார் ரேஸுக்குள் சென்ற பிறகு ஏகேவுக்குள் இவ்வளவு மாற்றமா என்று திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் உச்சபட்ச ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
படையெடுக்கும் பிரபலங்கள், ரசிகர்கள்: இது ஒருபக்கம் இருக்க அவர் எந்த நாட்டுக்கு சென்று ரேஸில் கலந்துகொண்டாலும் அங்கே ரசிகர்களும் படையெடுத்து சென்று அவரை பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும்போது அவர்கள் அத்துமீற செய்தால் உடனடியாக கண்டிக்கவும் செய்கிறார் ஏகே. இன்றுகூட ஒரு ரசிகரிடம், 'கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். இது ஒன்றும் தியேட்டர் கிடையாது' என கண்டித்த வீடியோ இணையத்தில் சென்சேஷனல் ஆனது.
அந்தணன் விளக்கம்: ரசிகர்கள் மட்டுமின்றி சிம்பு, சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், நயன்தாரா, வெங்கட் பிரபு என பல பிரபலங்கள் அஜித்தை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து பேசுகையில், "அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸுக்கு ஸ்பான்சர் செய்யும் ஸ்பான்சர்கள் நிறைய பிரபலங்களை அழைத்து வர வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அஜித் தரப்பிலிருந்து டிக்கெட் போட்டு இன்வைட் செய்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











