ஷார்ட்ஸ் உடையில் செம ஃபிட்.. உடல் எடையை குறைத்து அசத்தும் அஜித்.. டிரெண்டாகும் ரீசன்ட் க்ளிக்!

சென்னை: நடிகர் அஜித் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர் ஒருவருடன் அவர் எடுத்துக் கொண்ட ரீசன்ட் க்ளிக் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினேத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.

இந்த படத்திற்காக 25 கிலோ எடை வரை குறைத்து நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உடல் எடையை குறைத்து மாஸ் காட்டி உள்ளார் அஜித்.

ஏமாற்றிய போனி கபூர்

ஏமாற்றிய போனி கபூர்

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்படியாவது ஏகே61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காவது இன்று வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அஜித் பிறந்தநாளுக்கு எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் போனி கபூர் ஏமாற்றி உள்ளார் என அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

டிரெண்டாகும் ரீசன்ட் க்ளிக்

டிரெண்டாகும் ரீசன்ட் க்ளிக்

ஆனால், ரசிகர்களை இந்த நாளில் சும்மா தவிக்க விடக் கூடாது என நினைத்த அஜித்துக்கு நெருக்கமான சிலர், நடிகர் அஜித்தின் ரீசன்ட் க்ளிக்கை ஒன்று வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளனர். அந்த புகைப்படத்தில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு செம ஹேண்ட்ஸம் ஆக போஸ் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

செம ஃபிட்

செம ஃபிட்

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன நடிகர் அஜித் உடல் எடை குறைந்து செம ஃபிட்டாக உள்ளாரே என்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர். சமீபத்தில் கோட் சூட் அணிந்து விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்களில் எல்லாம் அஜித்தின் உடல் எடை அதிகமாக இருந்த நிலையில், தற்போது டோட்டல் டிரான்ஸ்ஃபார்ம் ஆகி உள்ளார்

கடும் வொர்க்கவுட்

கடும் வொர்க்கவுட்

உடல் முழுக்க ஏகப்பட்ட காயங்கள் இருந்தாலும், 51 வயதிலும் ஒவ்வொரு படத்திற்கும் கடும் உழைப்பை போட்டு நடித்து வருகிறார் நடிகர் அஜித். சமீபத்தில் கேரளாவில் பிரத்யேகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகின. இந்நிலையில், அஜித்தின் உடல் எடை குறைந்து வெளியாகி உள்ள புகைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

சூப்பர் லைன் அப்

சூப்பர் லைன் அப்

நடிகர் அஜித் குமார் மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X