நான் என்ன கொலைகாரனா.. கொள்ளைக்காரனா.. தீயாக பரவும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

சென்னை: நாடு முழுவதும் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது ஹெல்மெட்டை கழட்டி விட்டு நான் என்ன கொலைகாரனா.. கொள்ளைக்காரனா என நடிகர் அஜித் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.

அவருக்கு இந்த படத்தில் ஜோடியாக முதன் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.

ஷூட்டிங் நிறுத்தம்

ஷூட்டிங் நிறுத்தம்

பரபரப்பாக நடைபெற்று வந்த அஜித்தின் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் அஜித் ஐரோப்பா நாடுகளுக்கு பைக் டூர் சென்று வந்தார். இந்நிலையில், இந்த முறை நாடு முழுவதும் நடிகர் அஜித் பைக் டூர் செய்து வருகிறார். அவரது பைக் டூர் ரூட் மேப்பை அதிகாரப்பூர்வமாகவே சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டு இருந்தார்.

அஜித் தரிசனம்

அஜித் தரிசனம்

ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக நடிகர் அஜித் இமய மலை உள்ளிட்ட வடமாநிலங்களில் பைக் டூர் செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன. மேலும், கோயில்களில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ஏகே 61 ஹீரோயினுடன்

ஏகே 61 ஹீரோயினுடன்

இதுவரை இல்லாத அளவு இந்த முறை நடிகர் அஜித் தன்னுடன் ஏகே 61 படத்தில் இணைந்து நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியரையும் பைக் ரைடுக்கு அழைத்துச் சென்றது அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து கொண்டு பைக் ஓட்டிய அனுபவங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கொலைகாரனா கொள்ளைக்காரனா

கொலைகாரனா கொள்ளைக்காரனா

இந்நிலையில், ரசிகர்கள் சிலர் நடிகர் அஜித்தை பின் தொடர்ந்து சென்ற நிலையில், பைக்கில் இருந்து இறங்கியபடியே அவர்களுடன் நடிகர் அஜித் பேச்சுக் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. உங்களைத்தான் ரெண்டு நாளா தேடிட்டு இருக்கோம் என ரசிகர்கள் சொல்ல, எதுக்கு தேடுறீங்க நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா என அஜித் கிண்டலாக அவர்களுடன் பேசும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அஜித் குரல்

அஜித் குரல்

நடிகர் அஜித்தின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு அவர் ஆஃப் ஸ்க்ரீனில் எப்படி ரசிகர்களுடன் ஜாலியாக பேசுகிறார் என்பது தெரிய வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சீக்கிரம் பைக் டூர் முடிச்சிட்டு ஏகே61 அப்டேட் கொடுங்க தல என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X