»   »  குட்டி ‘தல’ பேர் தெரியுமா? ஆத்விக் அஜீத் குமார்

குட்டி ‘தல’ பேர் தெரியுமா? ஆத்விக் அஜீத் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல அஜீத் குமாரின் மகனுக்கு ஆத்விக் என்று பெயர்சூட்டியுள்ளனர். இந்த பெயரை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்ட் ஆக்க முயற்சி செய்து வருகின்றனர்.

நடிகர் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு கடந்த மார்ச் 2ஆம் தேதியன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ‘குட்டி தல' என்றே கொண்டாடி வந்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக்கிலும் படங்களையும், தகவல்களையும் பறிமாறி வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அஜீத்குமார்

அனொஷ்கா அஜீத்

அனொஷ்கா அஜீத்

2000ம் ஆண்டு ஏப்.24ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2008ல் மகள் அனொஷ்கா பிறந்தாள்.

ஆண்குழந்தைக்கு தந்தை

ஆண்குழந்தைக்கு தந்தை

இந்நிலையில் ஷாலினி - அஜீத் தம்பதியினருக்கு 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. இம்முறை ஆண்குழந்தைக்கு தந்தையானார் அஜீத்.

பிரசவ அறையில் அஜீத்

பிரசவ அறையில் அஜீத்

முதல் குழந்தை பிறந்தபோது சிசேரியன் சமயத்தில் ஷாலினி உடன் அஜீத் இருந்தார். அதேபோல் இம்முறையும் அவர் உடனிருந்தார். குழந்தை பிறந்ததும், மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார். திரையுலகை சேர்ந்த பலர், அஜீத்துக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

குட்டி தல ட்ரெண்ட்

குட்டி தல ட்ரெண்ட்

நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு மார்ச் 2-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அந்தத் தம்பதியை வாழ்த்தும் வகையில், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #KuttyThala என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்ட்டானது.

தனித்துவமானவன்

தனித்துவமானவன்

இந்த நிலையில் குழந்தைக்கு ஆத்விக் அஜீத் குமார் என்று பெயர் சூட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆத்விக் என்றால் தனித்துவமானவன் என்று அர்த்தமாம்.

English summary
Ajith kumar's son named "Aadvik Ajith kumar" that means - Unique.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil