Don't Miss!
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- News
ஆஹா.. மேலிடத்தோடு தொடர்பாமே? எடப்பாடி வகுக்கும் "சைலண்ட்" வியூகம்.. அப்போ ஓபிஎஸ்.. போச்சா?
- Finance
கூகுள் $17 பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
‘தீ தளபதி‘ பாடலுக்கு போட்டியா களமிறங்கும்..அஜித்தின் ‘சில்லா சில்லா‘ பாடல்..கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை : அஜித் நடிக்கும் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' பாடலின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துணிவு திரைப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் கிராஅடுத்தக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
துணிவு
டூப்
நடிகர்
போட்டோவால்
வெடித்த
சர்ச்சை..
பிகில்
டூப்பை
தோண்டி
எடுத்து
அஜித்
ரசிகர்கள்
சண்டை!

அஜித்தின் துணிவு
எச்.வினோத் இயக்கத்தில்அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. 1987ஆம் ஆண்டு பஞ்சாபில் சிங் தலைமையில் வங்கியில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2009ம் ஆண்டுதான் வெளியானது இச்சம்பவத்தை மையமாக வைத்து துணிவு திரைப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சில்லா சில்லா பாடல் ரிலீஸ் தேதி
துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது அதன்படி சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை அனிருத் பாட, வைஷாக் என்பவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இப்பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், போனிக்கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில்லா சில்லா பாடல் வரும் 9ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

தீ தளபதி போட்டியா?
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேற்று பாடல் வெளியான நிலையில் பாடல் வெளியான 2 மணிநேரத்தில் 1.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்த பாடலுக்கு போட்டியாக சில்லா சில்லா பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடிச்சி மோதப்போகிறது
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாவது உறுதியாகியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேராக இந்த படங்கள் மோத உள்ள நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே தீ தளபதி பாடலுடன் சில்லா சில்லா பாடல் அடிச்சி மோதப்போகிறது.