ரஞ்சிதமே பாடலுடன் மல்லு கட்டப்போகும் சில்லா சில்லா..துணிவு பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
சென்னை : துணிவு படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டு உள்ளார்.
இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்தக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அஜித்தின் துணிவு
எச்.வினோத் இயக்கத்தில்அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அதாவது1987ஆம் ஆண்டு பஞ்சாபில் சிங் தலைமையில் வங்கியில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2009ம் ஆண்டுதான் வெளியானது இச்சம்பவத்தை மையமாக வைத்து துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது.

சில்லா...சில்லா முதல் பாடல்
இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அஜித்குமார் இந்த படத்திற்கான டப்பிங் நிறைவு செய்துவிட்டார். இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது அதன்படி சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், அதற்கு வைஷாக் என்பவர் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஞ்சிதமே பாடலுக்கு போட்டியா?
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் விஜய் மற்றும் மானசி பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து, யு டியூபில் இன்னமும் டிரெண்டிங்கில் உள்ள இந்த பாடலுக்கு போட்டியாக சில்லா சில்லா பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மல்லு கட்டப்போகுது
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாவது உறுதியாகியுள்ளது. தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேராக இந்த படங்கள் மோத உள்ள நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே ரஞ்சிதமே பாடலுடன் சில்லா சில்லா பாடல் மல்லு கட்டப்போகிறது.


Click it and Unblock the Notifications











