துணிவு படத்தின் ரன்னிங் டைம்..அந்த வார்த்தைக்கு பீப் போட்ட சென்சார் போர்டு!
சென்னை : அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தில், மலையாள நடிகை மஞ்சுவாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொகைன், மகாநதி ஷங்கர், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துணிவு
வங்கி கொள்ளையை மையமாக வைத்து துணிவு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து சில்லா சில்லா, கேங்ஸ்டாரா, காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு டிரைலர்
துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வங்கியை கொள்ளை அடிக்கும் கேங்ஸ்டராக அஜித் நடித்துள்ளார். துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுவது, கெட்டவார்த்தை பேசுவது என மங்காத்தா படத்தில் பார்த்த அஜித் போல மாஸாக நடித்துள்ளார். டிரைலரைப் பார்த்த ரசிகர் பீஸ்ட் படத்தை பார்ப்பது போல இருப்பதாக கூறி மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் டிரைலர் இதுவரை 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

ரன்னிங் டைம்
இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதில் துணிவு படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு கொடுத்துள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

17 இடங்களில் பீப்
மேலும், இப்படத்தில் வரும் வடக்கன்ஸ் என்கிற வார்த்தைக்கு பீப் போட்டதாகவும், காசேதான் கடவுளடா பாடலில் வரும் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டதாகவும், ஒரு சில காட்சிகளில் வந்த கெட்ட வார்த்தை என மொத்தம் 17 இடங்களில் மியூட் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், இரண்டு படங்களுக்கும் சரி சமமாக தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











