Don't Miss!
- News
"இதோ டேட்டா பாருங்க".. அண்ணாமலைக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. வேலையை காட்டிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
வானத்தில் டைவிங் அடித்து துணிவு ப்ரோமோஷன்.. இனிமேல் தான் தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : துணிவு படத்தின் ப்ரோமோஷனை வானத்தில் பறந்து ஸ்கை டைவிங் அடித்து வேறலெவில் விளம்பரப்படுத்தி உள்ளது லைகா நிறுவனம். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வெறித்தனம் வெறித்தனம் என வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
அஜித்தின் 61வது படமான இப்படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் போஸ்டர் இணையத்தை அலறவிட்டது எனலாம்.
இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், ஜான் கொக்கன், வீரா ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களை
சூடாக்கிய
காஜல்
அகர்வால்...
ஒரேயொரு
லிப்
லாப்
கிஸ்...
அதுவும்
யார்கூடன்னு
பாருங்க!

வலிமை
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். அஜித்தின் வலிமை படத்தை பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் திருப்திபடுத்தும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. தம்பி, அம்மா சென்டிமெண்ட் படத்தில் இருந்ததால், வலிமை படம் இணையத்தில் அதிக அளவில் ட்ரோலும் செய்யப்பட்டது.

மாறுபட்ட கெட்டப்பில்
இதையடுத்து, எச் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக இணைந்துள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு விதமான கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பைக் ரேஸ், அடிதடி சண்டை காட்சி என படம் சும்மா மிரட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாரிசா, துணிவா
பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 12ந் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. அதே தேதியில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால், இரண்டு ரசிகர்களும் வாரிசா, துணிவா என் கேட்டு சண்டைப் போட்டு வருகின்றனர். படம் வெளியாகும் வரை இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருபடங்கள் இருக்கின்றன.

கொண்டாடும் ரசிகர்கள்
துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் கடந்த மாதம் 9ம் தேதி வெளியாகி இதுவரை இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து உலக அளவில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அதேபோல், 2வது பாடலான காசே தான் கடவுளடா பாடல் வெளியானது. இதையடுத்து கிறிஸ்துமஸ் அன்று கேங்ஸ்டா என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலின் வரியை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வானத்தில் டைவிவ் அடித்து ப்ரோமோஷன்
இந்நிலையில், துணிவு படத்தின் வேற லெவல் புரமோஷன் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்த படி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டுள்ளனர். ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோலிவுட் படத்திற்கு இதுபோன்ற ஒரு ப்ரோமோஷனை செய்து உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. மேலும், வரும் 31ஆம் தேதி படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என்றும் லைகா அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.