விமர்சனத்தை விட்டுத் தள்ளுங்க.. வலிமை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல்களை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அறிந்து செம ஹேப்பியில் வலிமை படக்குழுவே இருப்பதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் சந்தோஷத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த செய்தி தெரிந்ததுமே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு வரும் என அறிந்து கொண்ட டிராக்கர்கள் வெளியிட்டுள்ள பாக்ஸ் ஆபிஸ் தகவலை இங்கே பார்ப்போம்.

விமர்சனத்தை தள்ளி வைங்க
அஜித் குமாரின் வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இயக்குநர் எச் வினோத் இயக்கம் என்பதால் திரைக்கதையில் மேஜிக் இல்லாமல் லாஜிக் இருக்கும் என எதிர்பார்த்ததே ரசிகர்களை ஏமாற்றியது என்றும், இளைஞர்களுக்கு தேவையான கருத்து படத்தில் உள்ளதால் அது போதும் என ரசிகர்கள் வலிமையை கொண்டாடி வருகின்றனர்.

முதல் நாள் வசூல்
180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள வலிமை படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 45 முதல் 50 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு முதல் நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழ்நாடு வசூல்
வலிமை படத்தின் தமிழ்நாடு வசூல் முதல் நாளில் 36.17 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என முதல் வாரம் முழுக்க வலிமை படம் வெளியான திரையரங்குகள் அரங்கு நிறைந்து ஓடினாலே மிகப்பெரிய வசூல் இந்த படத்திற்கு குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வசூல்
சென்னை நகரத்தில் 1.82 கோடி ரூபாயை வலிமை திரைப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை இல்லாத நாட்களில் வலிமை படம் வெளியான நிலையிலேயே அஜித் ரசிகர்கள் அந்த படத்தை திருவிழாவாக கொண்டாடி இப்படியொரு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். விரைவில் வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

பொறுப்பு இருக்க வேண்டும்
வலிமை அப்டேட் என்கிற ஒரு வார்த்தையை உலகம் முழுக்க ஒலிக்க செய்த ரசிகர்கள் தான் இப்படியொரு வசூல் வேட்டைக்கும் காரணமானவர்கள். அவர்களின் நாயகனை வைத்து படத்தை இயக்குவர்கள் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யும் வகையில் படமெடுத்து கொடுக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என்கிற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











