வலிமை படத்தின் திருட்டு பிரின்ட்டும் வந்துடுச்சாம்.. அனல் பறக்கும் டெலிகிராம் டவுன்லோடுகள்!

சென்னை: அஜித் குமார் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக இன்று (பிப்., 24) வெளியான வலிமை திரைப்படத்தின் திருட்டு பிரின்ட்டும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

ஒடிடியில் படங்கள் வெளியானால் ஹெச்.டி. பிரின்ட்டாக அடுத்த நொடியே வந்து விடுகிறது. அதேபோலவே தியேட்டரில் வெளியாகும் படங்களின் தியேட்டர் பிரின்ட்டுகளும் முதல் ஷோ முடிந்ததும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களில் வந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அட்டகாசமான ஆக்‌ஷன் திரைப்படமான வலிமை திரைப்படத்தின் பைரசி பிரின்ட்டும் வெளியாகி உள்ளது.

டிக்கெட்டுக்காக அலையும் ரசிகர்கள்

டிக்கெட்டுக்காக அலையும் ரசிகர்கள்

வலிமை படத்தை முதல் நாளிலேயே பார்க்க வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொரு திரையரங்கமாக பைக்குகளில் டிக்கெட்டுக்காக சுற்றி வருகின்றனர். டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

லீக்கான வலிமை

லீக்கான வலிமை

வலிமை திரைப்படம் இன்று ரிலீசான நிலையில், முதல் காட்சி முடிந்ததும் சுடச் சுட திருட்டு பிரின்ட் பைரஸி சைட்டுகளில் வெளியாகி உள்ளன. டெலிகிராமில் வலிமை படத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர். ஆனால், அஜித் ரசிகர்கள் காத்திருந்து பெரிய திரையில் தான் படத்தை பார்க்க வேண்டும் என்கிற முடிவுடன் அதை தவிர்த்து வருகின்றனர்.

கூச்சல் போடாதீங்க

கூச்சல் போடாதீங்க

திருட்டு பிரின்ட்டில் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை இணையத்திலும் ஷேர் செய்து, அஜித் ரசிகர்கள் கூச்சல் போடாமல் சும்மா இருங்க என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். கடைசி வரை அஜித் பேசும் வசனம் ஏதும் கேட்கவில்லை என்றும் புகார் அளித்து வருகின்றனர்.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

சினிமா, வெப்சீரிஸ் என எந்தவொரு புதிய படைப்பு வெளியானாலும் இப்படி உடனடியாக திருட்டு பிரின்ட்டுகள் லீக்காகி வருவது தயாரிப்பாளர்களுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கி விடுகிறது. திருட்டு பிரின்ட்டை தடுக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் முயற்சித்து வந்தாலும் இதனை தடுக்கவே முடியவில்லை.

Recommended Video

Valimai FDFS Review | Ajith | Huma Qureshi | H Vinod | Yessa Bussa | Filmibeat Tamil
பாதிக்காது

பாதிக்காது

நடிகர் அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் திருட்டு பிரின்ட் வெளியானாலும், ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்க்கவே விரும்புவார்கள் என்றும், அதனால், பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த பிரச்சனையை சீக்கிரம் சரி செய்தால் தான் சினிமா துறை தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X