பேச்சை விட செயல் தரமா இருக்கும்.. வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் இந்த அப்டேட்டுக்காகத்தான் காத்திருந்தனர்.
கடந்த மாதமே பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆக வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது.

வலிமை ரிலீஸ் தேதி
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வலிமை படக்குழு தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அதே தேதி தான்
ஏற்கனவே வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என ஏகப்பட்ட தியேட்டர் ஓனர்களே ட்வீட் போட்ட நிலையில், தற்போது அதே தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் சற்றே தாமதமாக அறிவித்துள்ளார். நேற்றே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சொல் அல்ல செயல்
நீண்ட நாள் ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்ய எந்தவொரு வெட்டிப் பேச்சுக்களையும் பில்டப்புகளையும் கொடுக்காமல் ஸ்ட்ரெயிட்டாக செயலில் இறங்கி விடப் போவதாக ட்வீட் போட்டு தயாரிப்பாளர் போனி கபூர் கெத்துக் காட்டி உள்ளார். வலிமை மாதம் பிறந்து விட்டது என நேற்று முதல் ரசிகர்கள் செய்த டிரெண்ட் வீணாக போகவில்லை.

தியேட்டர்கள் தெறிக்கும்
நடிகர் அஜித் குமாரின் டிரைலரை பார்த்தே ஏகப்பட்ட ரசிகர்களுக்கு புல்லரித்துப் போன நிலையில், அஜித் குமாரை பெரிய திரைகளில் காணும் வாய்ப்பு கூடிய விரைவில் கிடைக்க உள்ள நிலையில், தியேட்டர்கள் எல்லாம் ரசிகர்களின் கூட்டத்தால் தெறிக்கப் போவது கன்ஃபார்ம் என அஜித் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

100 சதவீத இருக்கைகள்
புதுச்சேரியில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 10ம் தேதிக்கு மேல் தமிழ்நாட்டிலும் 100 சதவீத இருக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே பிப்ரவரி 24ம் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

4 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் இந்தி புரமோஷனும் ஆரம்பமாகும் என தெரிகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் அவரது மகள் ஜான்வி கபூர் மற்றும் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தி புரமோஷனை மேற்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் புஷ்பா திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஜித் குமாரின் வலிமை படமும் பாலிவுட்டில் கலெக்ஷன் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











